சக்ரவாகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சக்ரவாகம் கருநாடக இசையின் 16 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் 16 வது இராகத்திற்குத் தோயவேகவாகினி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
தியாகராஜர் இந்த இராகத்தை வழக்கிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகா வைத்தியநாத சிவன் இந்த இராகத்தைத் தன் 12 வது வயதில் சிறப்பாகப் பாடியதால் "மகா" என்ற புனைபெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
இலக்கணம்

ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம1 ப த2 நி1 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி1 த2 ப ம1 க3 ரி1 ஸ |
சிறப்பு அம்சங்கள்
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் ராமப்பிரியா (52) ஆகும்.
- இதன் மத்திமத்தை ஷட்ஜமாக வைத்தால் சரசாங்கி (27) கிடைக்கும், நிஷாதத்தை ஷட்ஜ்மாக வைத்தால் தர்மவதி (59) கிடைக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள்
சக்ரவாகம் இராகத்தில் அமைந்த பாடல்கள்[1]:
ஜன்ய இராகங்கள்
சக்கரவாகத்தின் ஜன்ய இராகங்கள் இவை.
சக்ரவாகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்
- "நீ பாதி நான் பாதி" - கேளடி கண்மணி
- "உள்ளத்தில் நல்ல உள்ளம்" - கர்ணன்
- "பாடு பாடு பாரத பண்பாடு" - செங்கோட்டை
- "விடுகதையா இந்த வாழ்க்கை" - முத்து
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads