சக்வால் மாவட்டம்

பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சக்வால் மாவட்டம்
Remove ads

சக்வால் மாவட்டம் (Chakwal District) (Urdu: ضِلع چکوال) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கில் ராவல்பிண்டி கோட்டத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் சக்வால் நகரம் ஆகும். இம்மாவட்டம் போத்தோகர் பீடபூமியில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் சக்வால் மாவட்டம் چکوال, நாடு ...

இம்மாவட்டம் ஜீலம் மாவட்டம் மற்றும் அட்டோக் மாவட்டங்களின் சில தாலுக்காக்களைக் கொண்டு 1985-இல் துவக்கப்பட்டது.[2]

Remove ads

மாவட்ட நிர்வாகம்

6,524 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின்[3][4] நிர்வாக வசதிக்காக சக்வால், கல்லர், சோவா சைதான் ஷா, தலாகாங் மற்றும் லாவா என ஐந்து தாலுக்காகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகளும், ஒரு மாவட்ட வளர்ச்சி குழுவும், 68 கிராம ஒன்றியக் குழுக்களும், 198 வருவாய் கிராமங்களும், 11 காவல் நிலையங்களும் உள்ளது.

அரசியல்

இம்மாவட்டம் இரண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதிகளையும், நான்கு பஞ்சாப் மாகாண சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

6,524 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சக்வால் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 10,83,725 ஆகும். மொத்த மக்களில் நகரப்புறங்களில் 21.01% மக்கள் வாழ்கின்றனர்.[5] சராசரி எழுத்தறிவு விகிதம் 56.72% ஆக உள்ளது.[6] இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழியை 97.7% மக்களும் பஷ்தூ மொழியை 1.2% மக்களும், உருது மொழியை 0.9% மக்களும் பேசுகின்றனர்.

கல்வி

சக்வால் மாவட்டத்தில் உள்ள 1199 அரசுப் பள்ளிகளில் 627 பள்ளிகள் பெண்களுக்கானது.[7]

முக்கிய கல்வி நிலையங்கள்

  • அரசு பட்டமேற்படிப்பு கல்லூரி, சக்வால்
  • அர்சு மகளிர் கல்லூரி, சக்வால்
  • கல்லார் கஹர் இராணுவப் பயிற்சி கல்லூரி

பொருளாதாரம்

இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்து உள்ளது. இங்கு வற்றாத ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. இங்கு கோதுமை, கரும்பு, பார்லி, பயறு வகைகள், சோளம், சிறு தானியங்கள் பயிரிடப்படுகிறது. மேலும் இங்கு பெரிய சிமெண்ட் ஆலையும் உள்ளது.

கட்டாஸ் ராஜ் கோயில்கள்

இம்மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நூறு கோயில்கள் கட்டாஸ் ராஜ் எனும் பகுதியில் உள்ளது. இக்கோயிலுக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். மேலும் கட்டாஸ் ராஜ் பகுதியில் தொன்மையான சமசுகிருத பல்கலைக்கழகம் இருந்துள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads