சங்ககால இரணியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்ககால இரணியன் என்பவர் சங்ககாலத்தில் இருந்த பாண்டியர்களின் தளபதிகளில் ஒருவர் ஆவார். இந்த தளபதியின் வீரதீரச் செயல்களைப் பாராட்டி பாண்டியநாட்டின் குறுகுறு நிலப்பகுதிக்கு இரணிய முட்டம் நாடு என்றே பாண்டியன் பெயரிட்டுள்ளான். படைத்தலைவர்களை பெருமைப் படுத்தும் பாண்டியரின் நற்பண்புக்கு இது ஒரு நல்ல சான்றாகும்.
அந்த நாடு நத்தம், அழகர் மலை, ஆனைமலை திருப்பத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இருந்தது.[1] முதலாம் பராந்தக கால கல்வெட்டுகள் இந்நாட்டை கீழ் இரணிய முட்டம் என்றும் மேல் இரணிய முட்டம் என்றும் பிரித்து இருந்ததாக கூறுகின்றன.[2][3]
Remove ads


அழகர் மலையில் உள்ள ஒரு கோட்டைக்கு இரணியன் கோட்டை என்றே பெயர் உள்ளது. இந்தக் கோட்டையை முதன்முதலில் கட்டிய பழங்கால தலைவனாக இவன் இருக்கலாம்.
வரலாற்று ஆசிரியர்களில் சிலர் இரணிய வர்மன் என்னும் சிம்ம விஷ்ணுவே இந்தக் கோட்டையைக் கட்டினான், எனவே அது இரணியன் கோட்டை எனப் பெயர் பெற்றது என தவறாக கருதுகின்றனர். ஆனால் பல்லவர்கள் ஆட்சி தோன்றுவதற்கு முன்னரே இரணிய முட்டம் என்று அழகர்மலை பெயர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தளபதியே இரணியன் கோட்டை என்பதை கட்டிஇருப்பார். அவரது பெயரைக்கொண்டே பிற்காலத்தில் விரிவு படுத்த்தப்பட்டுள்ளது.
Remove ads
இவர் எர்ரக்கம்மாள் (எரக்கொற்றி) என்னும் கொற்றவை தெய்வத்தை வழிபட்டு வந்ததாக இவரது கதை கூறுகிறது. இந்த தெய்வத்தின் கோவில் பழங்காலதொல்லியல் சின்னங்கள் உடன் காணப்படுகிறது. கல்வட்டம், கல்பதுக்கை கற்குழி முதலான தொல்லியல் சின்னங்கள் உடன் திண்டுக்கல் மாவட்டம் சந்தையூர் என்னும் இடத்தில் எர்ரக்கம்மாள் கோவில் உள்ளது.[4]
இவரது வழியினரின் குடும்ப பெயர்களும் மிகவும் தொன்மை வாய்ந்ததாக உள்ளன. எரணன், எரவாதன், வெளியன் (வெள்ளையன்) தித்தன் (தொத்தன்) போசன் (கோசர்) போன்ற வராற்று சிறப்புமிக்கவையாக உள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads