சங்கரபதிக்கோட்டை

சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டைகளுள் ஒன்று From Wikipedia, the free encyclopedia

சங்கரபதிக்கோட்டை
Remove ads

சங்கரபதிக்கோட்டை (Sangarapathikottai) என்பது 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மருது பாண்டியர் போர்ப் பயிற்சி பாசறையும் புகலிடமாகவும் இருந்தது.[1] இது தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில், தேவகோட்டையின் அருகில் உள்ள அமராவதிபுதூர் கிராமத்தில் இக்கோட்டை அமைந்துள்ளது. தமிழ்நாடு வனத்துறைக்குச் சொந்தமான இக்கோட்டையைத் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது.[2] ஆனால் தற்போது இக்கோட்டை மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

Thumb
சங்கரபதிக்கோட்டையின் சிதிலமடைந்த காட்சி.

வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரன் ஊமைத்துரையும் இந்தக் கோட்டையை மறைந்து கொள்ளும் இடமாக பயன்படுத்தியுள்ளார். இந்தக் கோட்டையின் கட்டுமானம் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இக்கோட்டை 50 கற்தூண்களுடன் இதன் வடிவமைப்பிற்கு மிகவும் பொருத்தமாக காட்சியளிக்கிறது.[3]

Remove ads

மான்கள்

இக்கோட்டை வனப்பகுதியில் அமைந்துள்ளதால் இதனைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் புள்ளிமான்கள் நிறையக் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads