சங்கற்ப நிராகரணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சங்கற்ப நிராகரணம் என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட ஒரு நூலாகும். இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது சைவ சித்தாந்தத்துக்கு நெருக்கமான, அகச் சமயத் தத்துவங்களை மறுத்து எழுதப்பட்டது.

  1. ஈசுவர அவிகார வாதம்
  2. ஐக்கிய வாதம்
  3. சங்கிராந்த வாதம்
  4. சிவசம வாதம்
  5. சைவ வாதம்
  6. நிமித்தகாரண பரிணாம வாதம்
  7. பாடாண வாதம்
  8. பேத வாதம்
  9. மாயா வாதம்

என்னும் ஒன்பது சமயவாதங்கள் மறுக்கப்பட்டுச் சைவ சித்தாந்தம் நிலைநாட்டப்படுகிறது.[1]

  1. சிவசங்கிராந்த வாதம்
  2. சிவாத்துவித வாதம்

என்னும் இரண்டு சமயவாதங்களும் மறுக்கப்பட்டுச் சைவ சித்தாந்தம் நிலைநாட்டப்படுகிறது.[2][தெளிவுபடுத்துக]

Remove ads

நூல்

இந்த நூல் 474 குறள் வெண்பாக்களால் ஆனது.

  • ஆதுலர்க்கு(நோயாளிகளுக்கு)ச் சாலை அமைத்து அன்பால் மருந்தளித்தல்
  • ஆரியமும் செந்தமிழும் ஆராய்தல்
  • திருப்பணி செய்தல்
  • பொருள் வழங்குதல்

முதலான அறங்கள் இந் நூலில் போற்றப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டுக்கு நூலிலுள்ள ஒரு குறள்

கொண்டல்போ லுங்கரத்தான் என்றால் கொடைஎணுவர்
கொண்டலுரு கையிற் கொளார்.

'கொண்டல் போலும் கரத்தான்' என்றால் கொண்டல் என்னும் மேகத்தின் உருவம் அவன் கையில் இல்லை. கொண்டல் போல் கைம்மாறு கருதாமல் வழங்கும் கொடை அவன் எண்ணத்தில் உள்ளது. - என்பது இந்தப் பாடலின் பொருள். எண்ணம் என்னும் சித்தத்தின் முடிவுதான் சித்தாந்தம் என்பதை வலியுறுத்தும் பாடல் இது. சாக்கியர் கல் எறிந்து அருள் பெற்றதை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறார்.

நூலிலுள்ள மற்றொரு குறள்

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்துநினை
என்றும் சிவன்தாள் இணை.

நின்றாலும், அமர்ந்திருந்தாலும், படுத்துக் கிடந்தாலும், நடந்துகொண்டிருந்தாலும் சிவனது திருவடிகளை நினைக்க வேண்டும் என்பது இதன் பொருள். நினைப்பதுதான் சித்தாந்தம் என்பது இதிலும் வலியுறுத்தப்படுவது காண்க.
Remove ads

உசாத்துணைகள்

  • இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
  • உமாபதி சிவாச்சாரியார், சங்கற்ப நிராகரணம் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம், மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
Remove ads

அடிக்குறிப்பு

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads