சங்கிரமராஜா
காஷ்மீரின் மன்னன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கிரமராஜா (Sangramaraja) அல்லது சம்கிரமராஜா இலோகரா வம்சத்தை நிறுவியவர். இவர் பொ.ச. 1003 முதல் 1028 வரை காஷ்மீரை ஆண்டார். இவர், கசினியின் மகுமூதுவின் காஷ்மீர் மீதானபடையெடுப்பு முயற்சிகளைத் தோற்கடித்த பெருமைக்குரியவர்.[1]
Remove ads
ஆட்சி
சம்கிராமராஜாவை அவரது அத்தை இராணி தித்தா தத்தெடுத்து, தனது வாரிசாக நியமித்து, 1003ல் ஆட்சியாளரானார். இவரது ஆட்சி 1028 வரை[2] நீடித்தது. இவரது இராணி சிறீலேகா, மிகவும் திறமையானவர். மேலும், ஆட்சியிலும், கசினி மகுமூது காஷ்மீர் மீது படையெடுக்க முயன்றபோதும் தனது கணவருக்கு அறிவுரை வழங்கினார்.[3]
கசினி மகுமூதுக்கு எதிரான போர்கள்
1014 இல், கசினியின் மகுமூது இந்து ஷாகி அரசைத் தாக்கினார். ஷாகி ஆட்சியாளர் திரிலோச்சனபாலன் மகுமூதுவிற்கு எதிராக சங்கிரமராஜாவிடம் உதவி கோரினார். இவர் தனது தளபதியான துங்கனின் தலைமையின் கீழ் ஒரு பெரிய படையை திரிலோச்சனபாலனுக்கு உதவ அனுப்பினார். ஆனாலும் தொடர்ந்து நடந்த போரில் திரிலோச்சனபாலன் தோற்கடிக்கப்பட்டான்.[4] [5]
சங்கிரமராஜா திரிலோச்சனபாலனுக்கு உதவியதால் கோபமடைந்த மகுமூது காஷ்மீரை ஆக்கிரமித்தார். அவர் பூஞ்ச் ஆறு வழியாக முன்னேறினார். தோசா மைதானம் வழியாக காஷ்மீருக்குள் நுழைய திட்டமிட்டார். இருப்பினும், லோஹர்கோட்டின் வலுவான கோட்டையால் அவரது முன்னேற்றம் தடுக்கப்பட்டது. ஒரு மாத காலம் கோட்டையை முற்றுகையிட்ட பிறகு, மகுமூது முற்றுகையை கைவிட்டு பின்வாங்கினார். அவர் தனது பல துருப்புக்களை இழந்தார். 1021 இல், மகுமூது மீண்டும் காஷ்மீரை ஆக்கிரமிக்க முயன்றார். ஆனால் மீண்டும் லோஹர்கோட் கோட்டையைத் தாண்டி முன்னேற முடியவில்லை. இரண்டாவது சந்தர்ப்பத்தில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக அவரது தகவல்தொடர்புகளில் இடையூறு ஏற்பட்டது. வரலாற்றாசிரியர் மொஹிபுல் ஹசன் கூற்றுப்படி இந்தியாவில் மகமூது அனுபவித்த முதல் கடுமையான பின்னடைவு இதுவாகும். [6] இரண்டு படையெடுப்பு முயற்சிகளும் தோல்வியடைந்த பிறகு, அவர் மீண்டும் காஷ்மீரை ஆக்கிரமிக்க முயற்சிக்கவில்லை.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads