இந்து ஷாகி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்து ஷாகி (Hindu Shahi) அல்லது காபூல் ஷாகி [1] (பொ.ச. 850-1026) என்பது ஒரு இந்து வம்சமாகும். இது காபூல் பள்ளத்தாக்கு (கிழக்கு ஆப்கானித்தான்), காந்தார தேசம் (நவீனகால பாக்கித்தான்), இன்றைய வடமேற்கு இந்தியா ஆகியவற்றில் இந்திய துணைக் கண்டத்தில் இடைக்காலத்திலிருந்தது. இதன் ஆட்சியாளர்களைப் பற்றிய விவரங்கள் வரலாற்றாசிரியர்கள், நாணயங்கள் கல் கல்வெட்டுகள் ஆகியவற்றிலிருந்து ஆராய்ச்சியாளர்களால் சேகரிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இவர்களின் வரலாற்றின் ஒருங்கிணைந்த கணக்கு எதுவும் கிடைக்கவில்லை.[2]
Remove ads
வரலாறு
கலீபா அல்-மமுன் தலைமையிலான அப்பாசியக் கலீபகம் பொ.ச. 815இல் துர்க் ஷாஹி இராச்சியத்தை தோற்கடித்தது. இந்த தோல்விக்குப் பிறகு, துருக்கிய ஷா இசுலாமிற்கு மாற வேண்டியிருந்தது. மேலும் ஆண்டு அடிப்படையில் 1.500.000 திர்ஹாம்களையும், அப்பாசியர்களுக்கு அடிமைகளையும் அளிக்க வேண்டியிருந்தது.[3] இந்த காபூல் ஷாகிகள் தோல்விகளாலும், வருடாந்திர கொடுப்பனவுகள் காரணமாகவும் ஒரு அரசியல் பேரழிவைச் சந்தித்தனர். இறுதியில், பொ.ச. 850-ல் பிரபலமற்ற காபூல் ஷா லகதுர்மன் என்பவரின் நிலை, கல்லர் என்று அழைக்கப்படும் அவரது அமைச்சரால் அகற்றப்பட்டது. இது மற்றொரு காபூல் ஷாகி வம்சத்திற்கு வழிவகுத்தது. இந்த புதிய வம்சத்தை அரேபியர்கள் "இந்து ஷாகி" என்று அழைத்தனர். இந்த ஷாகி இராச்சியம் காபூல் பள்ளத்தாக்கு மற்றும் காந்தாராவைக் தனது பகுதிகளாகக் கொண்டிருந்தது.[3]
870 இல், கல்லர் மன்னர் காபூல் நகரத்தை இழந்தார். உள்ளூர் சபாரித்துகளால் அவர் அங்கிருந்து இடம்பெயர்ந்தார். இது எமிர் யாகூப் பின் லெய்தால் சாபர் என்பவரால் ஆளப்பட்டது. உள்ளூர் சபாரித்துகள் மற்றும் சமானித்துகளின் தொடர்ச்சியான வெற்றிகளின் காரணமாக, அவர் தனது தலைநகரை 870 இல் சிந்துவின் கரையில் அமைந்துள்ள உதபந்தபுரத்திற்கு (வைகுந்தம் அல்லது குந்தம் என்றும் அழைக்கப்பட்டது.) மாற்றினார். இந்தத் தோல்வி குறுகிய காலமே நீட்டித்தது. கி.பி 879 இல் இந்து ஷாகி நகரத்தை மீண்டும் கைப்பற்றியது. இப்பகுதியில் சமானித்துகள் விரிவாக்கம் காரணமாக இந்த வெற்றி குறுகிய காலமே இருந்தது, இது இறுதியில் கி.பி 900 இல் காபூலில் இறுதி ஷாஹி ஆட்சிக்கு வழிவகுத்தது. காந்தாரம் மற்றும் பஞ்சாபின் பிற பகுதிகளில் இந்து ஷாஹி வலுவாக இருந்தது.[3]
- அம்ப் இந்து கோயில் வளாகம், இந்து ஷாகி பேரரசின் ஆட்சியில் கி.பி 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டது.
- இந்து ஷாகிக்களின் நாணயங்கள், பின்னர் மத்திய கிழக்கில் அப்பாசிய நாணயங்களுக்கு ஊக்கமளித்த்ன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads