சஜித் பிரேமதாச

From Wikipedia, the free encyclopedia

சஜித் பிரேமதாச
Remove ads

சஜித் பிரேமதாச (Sajith Premadasa, சிங்களம்: සජිත් ප්‍රේමදාස, பிறப்பு: சனவரி 12, 1967) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் சஜித் பிரேமதாசSajith Premadasaநா.உ., எதிர்க்கட்சித் தலைவர் ...

முன்னாள் அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாச கொழும்பு றோயல் கல்லூரியிலும், மில் ஹில் பாடசாலையிலும் கல்வி கற்று, இலண்டன் பொருளியல் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றார். மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்ட இவர் 1993 ஆம் ஆன்டில் இவரது தந்தை படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நாடு திரும்பினார். தந்தையின் ஐக்கிய தேசியக் கட்சியில் உறுப்பினராக இணைந்து அரசியலில் இறங்கினார். 2000 ஆம் ஆண்டில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ரத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 2001 ஆம் ஆண்டில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் சுகாதாரத் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2011 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரானார். 2015 இல் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2019 நவம்பரில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 41.99% வாக்குகள் பெற்று இலங்கை பொதுசன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் தோற்றார். இதனை அடுத்து 2019 திசம்பரில் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்டார்.[2] பின் 2020 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads