சஞ்சய் சுப்ரமணியம்

இந்திய வரலாற்று ஆய்வாளர் From Wikipedia, the free encyclopedia

சஞ்சய் சுப்ரமணியம்
Remove ads

சஞ்சய் சுப்பிரமணியம் (Sanjay Subrahmanyam) (பிறப்பு: மே 21, 1961) ஒரு இந்தியவியலாளர், வரலாற்றாளர். இந்தியாவை சேர்ந்த இவர், அமெரிக்காவின் தேசிய நூலகத்தில் உள்ள ஜான் க்ளுஜ் மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பல புத்தகங்கள் மற்றும் வெளியீடுகளின் ஆசிரியர் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டு பணியில் இணைந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (லாஸ் ஏஞ்சல்ஸ்) இர்விங் மற்றும் ஜீன் ஸ்டோன் சமூக அறிவியல் பீடத்தின் தலைவராக இருந்தார்.[1]

Thumb
2014-ஆம் ஆண்டில் பிரான்சில் சஞ்சய் சுப்ரமணியம்
Remove ads

குடும்பம்

இவரது தந்தை கிருஷ்ணசாமி சுப்பிரமணியன் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாகப் பணியாற்றிவர்.[2] இவரது அண்ணன் சுப்பிரமணியம் செயசங்கர் நரேந்திர மோடியின் இரண்டாம் அமைச்சரவையில் இந்திய வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றினார்.

படிப்பும் பணிகளும்

  • இளங்கலை (பொருளாதாரம்), முதுநிலை (பொருளாதாரம்) படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தார்.[3][4] 1987 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
  • பொருளாதார வரலாறு பிரிவில் பேராசிரியராக 1993-1995 ஆம் ஆண்டு வரை டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
  • பொருளாதார மற்றும் சமூக வரலாறு துறையின் இயக்குநராக பிரெஞ்சு நாட்டில் 1995 -2002 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
  • 2002 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாறு மற்றும் கலாச்சார துறையின் இயக்குநராக பணிபுரிந்தார்
  • பின்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தெற்காசியவியல் இயக்குநராக பணி புரிந்துள்ளார்.
Remove ads

விருதுகள்

  • 2012 ஆம் ஆண்டிற்கான இன்போசிஸ் விருதினைப் பெற்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads