சுப்பிரமணியம் செய்சங்கர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுப்பிரமணியம் ஜெய்சங்கர் (Subrahmanyam Jaishankar, 9 சனவரி 1955) இவர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். இறுதியாக இந்தியாவின் வெளியுறவுச் செயலராக பணியாற்றியவர்.[1][2] இந்திய வெளியுறவுப் பணிச்சேவை பேராளரான செயசங்கர் முன்னதாக செக் குடியரசிலும் (2001–04) சீனாவிலும் (2009–13) ஐக்கிய அமெரிக்காவிலும் (2014–15) இந்தியத் தூதராகவும் சிங்கப்பூரில் (2007–09) இந்திய உயர் ஆணையராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டை பேரம் பேசுவதில் முக்கியப் பங்காற்றி உள்ளார்.
Remove ads
நரேந்திர மோடியின் இரண்டாம் அமைச்சரவையில்
30 மே 2019 அன்று இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமரான பதவியேற்ற நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இவர் கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3][4] 31 மே 2019 அன்று இவருக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்றார்.[5][6]
குடும்பம்
இவரது தந்தை கிருஷ்ணசாமி சுப்பிரமணியன் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாக பணியாற்றிவர். இந்தியவியல் அறிஞரான இவரது தம்பி சஞ்சய் சுப்ரமணியம், ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நூலகத்தில் உள்ள ஜான் க்ளுஜ் மையத்தின் தலைவராக உள்ளார்.
வகித்த பதவிகள்
- 1977 இல் இந்திய வெளியுறவுத் துறையில் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
- 1985-1988க்கு இடையில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார்.
- 1990-1993க்கு இடையில் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக நியமிக்கப்பட்டார்.
- 1993-1995இல் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநராக (கிழக்கு ஆசியா) பதவியேற்றார்.
- 1995-1998 காலகட்டத்தில் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலர் (அமெரிக்கா) பொறுப்பு வகித்தார்.
- 2000-2004இல் சிங்கப்பூரில் இந்திய ஹை கமிஷனர் பதவி வகித்தார்.
- 2007-2009இல் வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக ஆனார் மற்றும் அமெரிக்க-இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்பை வழிநடத்தினார்.
- 2009-2013 வரை சீனாவுக்கான இந்தியத் தூதராக இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
- 2013-2015க்கு இடையில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்தார். மோதியின் நியூயார்க் பேரணியின் முக்கிய வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்.
- 2015-2018க்கு இடையில் இந்தியாவின் வெளியுறவு செயலராக இருந்த ஜெய்சங்கர், பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார்.
- 2019ஆம் ஆண்டு முதல் [[வெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா)|இந்திய வெளியுறவு அமைச்சர் ஆனார். இந்திய தூதாண்மையை பரப்புவதில் அதிக கவனம் செலுத்தினார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads