சஞ்சய் சுப்ரமண்யன்

From Wikipedia, the free encyclopedia

சஞ்சய் சுப்ரமண்யன்
Remove ads

சஞ்சய் சுப்ரமண்யன் (Sanjay Subrahmanyan[1] பி. சனவரி 21, 1968) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.

விரைவான உண்மைகள் சஞ்சய் சுப்ரமண்யன், பின்னணித் தகவல்கள் ...

சிறுவயதில்

இவரது தந்தை சங்கரன் கல்கத்தாவில் வேலை பார்த்ததால் சஞ்சய் சுப்ரமண்யன் சிறு வயதில் கல்கத்தாவில் வசித்தார். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தார். ரஞ்சி கோப்பை போட்டிகளில் தமிழ்நாட்டுக்காக ஆட வேண்டுமென விரும்பியதாக ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.[2]

கல்வி/இசைப் பயிற்சி

ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்த சஞ்சய், கல்வித் துறையில் பட்டயக் கணக்காளராகப் (chartered accountant) பட்டம் பெற்றார். தனது ஏழாவது வயதில் இசைப் பயிற்சியை தொடங்கிய சஞ்சய், தொடக்கத்தில் வி. லட்சுமிநாராயணனிடம் வயலினும் வாய்ப்பாட்டும் கற்றுக் கொண்டார். ஒரு சிறு விபத்தின் காரணமாக வயலின் வாசிப்பைத் தொடர முடியாமல் போனதால் வாய்ப்பாட்டு பயிற்சியை மேற்கொண்டார். இவரது பேத்தியார் ருக்மிணி இராஜகோபாலன் பரூர் சுந்தரம் ஐயரிடமும் பாபநாசம் சிவனிடமும் இசை பயின்றவர். 1930'களில் அகில இந்திய வானொலி தொடங்கிய காலத்திலிருந்து அதன் பாடகராக அங்கீகாரம் பெற்றிருந்தார். அத்துடன் மாணவர்களைப் பயிற்றுவிப்பதிலும் பெயர் பெற்றவராக இருந்தார். சஞ்சய் அவரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார். பின்னர் கல்கத்தா கே. எஸ். கிருஷ்ணமூர்த்தியிடம் பயிற்சி பெற்றார். அவர் சஞ்சயின் ஆக்கச் சிந்தனையையும் படைப்புத் திறனையும் வளர்த்துவிட்டார். இசை நிகழ்ச்சிகளின் போது சஞ்சயின் வெகு சுதந்திரமான வெளிப்பாடுகளுக்கு இந்தப் பயிற்சியே காரணமாக இருந்தது.[3] நாதசுவர வித்துவான் செம்பொன்னார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதனிடமும் இசைப் பயிற்சி பெற்றார்.

Remove ads

இசைக் கச்சேரிகள்

அகில இந்திய வானொலியில் ஒரு "உயர் ஏ" தர கலைஞராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். சென்னை, மும்பாய், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பல இந்திய நகரங்களிலும் அமெரிக்கா, ஆத்திரேலியா, இந்தோனேசியா, ஐக்கிய இராச்சியம், ஓமான், கனடா, சிங்கப்பூர், சுவிற்சர்லாந்து, மலேசியா ஆகிய வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகள் செய்துள்ளார். அரிய தமிழ்ப் பாடல்களைத் தேடியெடுத்து அவற்றிற்கு இசை வடிவம் தந்து பாடி வருகிறார்.

2013 டிசம்பரில் இவருக்கு கான பத்மம் விருதினை பாலமுரளி கிருஷ்ணா வழங்கினார்.[4]

விருதுகள்

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads