சஞ்சீவ் கண்ணா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சஞ்சீவ் கண்ணா (Sanjiv Khanna, பிறப்பு: 14 மே 1960) இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆவார். இவர் தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். இவரது தந்தை தேவ் ராஜ் கண்ணாவும் நீதிபதி பதவியினை வகித்தவர் ஆவார்.
Remove ads
இளமையும் கல்வியும்
சஞ்சீவ் கண்ணா 1977-ஆம் ஆண்டு தில்லியின் பாரகாம்பா சாலையில் உள்ள மாடர்ன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள தூய இசுடீபன் கல்லூரியில் 1980-ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு, தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இவரது தந்தை நீதிபதி தேவ் ராஜ் கண்ணா 1985-இல் தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது தாயார் சரோஜ் கண்ணா தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள சீமாட்டி சிறீராம் கல்லூரியில் இந்தி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
சஞ்சீவ் கண்ணா உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹன்ஸ் ராஜ் கண்ணாவின் மருமகன் ஆவார்.[1][2][3]
Remove ads
நீதிபதி பணி
சஞ்சீவ் கண்ணா 1983-ஆம் ஆண்டு தில்லி வழக்குரைஞர் கழகத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து பயிற்சி செய்துவந்தார். 20 பிப்ரவரி 2006 அன்று தில்லி உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு 18 சனவரி 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். தலைமை நீதிபதி தனஞ்சய சந்திரசூட் ஓய்வு பெற்ற பிறகு, 11 நவம்பர் 2024 முதல் இந்தியத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். 13 மே 2025 அன்று இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads