ரஞ்சன் கோகோய்
இந்திய நீதியரசர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீதியரசர் ரஞ்சன் கோகோய் (Ranjan Gogoi)(பிறப்பு 18 நவம்பர் 1954)[5] என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாவார். இதற்கு முன்பு இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆனவர் ஆவார். இவரின் தந்தையான கேசவ் சந்திர கோகோய் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் அசாம் மாநில முதலமைச்சராக 1982-ல் பதவி வகித்தவர் ஆவார்.
Remove ads
வாழ்க்கை
1954 நவம்பர் 18 அன்று அசாமின் கிழக்குப் பகுதியில் உள்ள திப்ருகர் நகரில் புகழ்பெற்ற குடும்பத்தில் ரஞ்சன் கோகோய் பிறந்தார். இவரது தந்தை அசாமின் முதல்வராகப் பதவிவகித்தவரான கேசவ் சந்திர கோகோய் ஆவார். திப்ருகர் நகரின் தான் போஸ்கோ பள்ளியில் படித்த ரஞ்சன் கோகோய், தில்லியில் புனித இசுடீபன் கல்லூரியில் இளங்கலை வரலாறு பயின்றார்.[6] தனது தந்தையைப் போலவே சட்டம் பயின்ற இவர், 1978-ல் வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்து, குவகாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலைச் செய்துவந்தார். 2001 பெப்ரவரி 28 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2010 பெப்ரவரி 12 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 2011 பெப்ரவரி 12 அன்று தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2012 ஏப்ரல் 23 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8] 2018 அக்டோபர் மூன்றாம் நாளன்று இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.[9]
Remove ads
வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்புகள்
- அயோத்தி பிரச்சினையில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நவம்பர் 9, 2019 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் 70 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நில வழக்கு முடிவுக்கு வந்தது.[10][11][12][13][14]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads