சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகரமாகக் கொண்ட பாண்டியர்களுள் முதல் மன்னனாவான். தென்காசிக் கோயிலிலுள்ள இவனது மெய்க்கீர்த்தி." பூமிசைவனிதை,நாவினில் பொலிய" எனத் தொடங்கும். பொன்னி பெருமான், மானகவசன் போன்ற சிறப்புப் பெயர்களினையும் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான்.
ஆற்றிய போர்கள்
திருக்குற்றாலத்தில் சேர மன்னனொருவனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றான் என தளவாய் அக்கிரகாரச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலைக்குளம், வீரகேரளம், புதூர் போன்ற ஊர்களில் பலரை வென்றுள்ளான் இம்மன்னன்.
ஆற்றிய அறப்பணிகள்
- விந்தனூர் மற்றும் ஜந்து ஊர்களிற்கு அக்கரகாரம் அமைத்து அந்தணர்களுக்குத் தானம் வழங்கினான் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்.
- திருக்குற்றாலம், திருப்புடை மருதூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களிற்கு மண்டபங்கள் அமைத்தான்.
- நெல்லை சிவன் கோயிலின் நள்ளிரவு வழிபாட்டிற்காக நிவந்தங்கள் அளித்தான் என மெய்க்கீர்த்திகளில் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.
- தென்காசி குன்றமன்ன கோயிலைக் கட்டியெழுப்ப உத்தரவிட்ட சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் அங்கு பல சிற்பங்களினையும் அமைக்க உத்தரவிட்டான். இவ்வாலயத்திற்கு நாள் வழிபாட்டிற்கும், விழா எடுக்கவும் தேவதானம், இறையிலியாக பல ஊர்களை உதவினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் கனவில் சிவன் தோன்றி தென்காசி, சித்ரா நதிக்கரையில் ஆலயம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணைய 17 ஆண்டுகள் இக்கோயில் பணிகள் நடைபெற்று கட்டி முடிக்கப்பட்டதென கற்றூண் கல்வெட்டு குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது.
- தென்காசிக் கோயிலில் ஒன்பது நிலைக் கோபுரங்கள் முழுமையானதாகக் கட்டப்படவில்லை ஆனால் இம்மன்னன் தனது பரம்பரையினருக்கு இக்கோபுரங்களை முழுமையானதாகக் கட்டியெழுப்ப ஆணையிட்டான்.
- தென்காசிக் கோயிலில் இவன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் எழுதிய பாடல்கள் வரையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இக்கோயிலிலேயே பிற்காலத்தில் வந்த பாண்டிய மன்னர்கள் முடிசூட்டிக்கொண்டனர்.
- செங்கோல் ஆட்சியை நடத்திய சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் விசுவநாதப் பேரேரி என்ற பெயருடன் ஒரு ஏரியை அமைத்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads