சண்டோலி தேசியப் பூங்கா

From Wikipedia, the free encyclopedia

சண்டோலி தேசியப் பூங்காmap
Remove ads

சண்டோலி தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Chandoli National Park (இந்தி: चांदोली राष्ट्रीय उद्यान)[1] இந்தியாவின் மகாராஸ்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தத் தேசியப் பூங்காவானது 2004 ஆம் ஆண்டு மே மாதம் உருவாக்கப்பட்டது.[2] இது 317.67 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 2007 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தியதி முதல் புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுலில் உள்ளது. தற்போது இங்கே 9 புலிகளும் 66 சிறுத்தைகளும் உள்ளன.இந்தப் பூங்காவானது சண்டோலி அணைக்கட்டின் அருகில் உள்ளது. இதன் அமைவிடம் 73°40' & 73°53' E மற்றும் 17°03' & 17°20'N ஆகும். இங்கு 23 வகையான பாலூட்டி இனங்கள், 122 வகையான பறவை இனங்கள், 20 வகையான ஊர்வன இனங்கள் உள்ளன. வங்காளப் புலி, இந்தியச் சிறுத்தை, அணில்கள், கரடிகள்,காட்டெருது போன்றவை அதிகம் காணப்படுகின்றன.

விரைவான உண்மைகள் சண்டோலி தேசியப் பூங்கா, அமைவிடம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads