சதாம் உசேன் நகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சதாம் உசேன் நகர் (Saddam Hussein Town) இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர் ஆகும்.[1] இது முன்னாள் ஈராக்கிய குடியரசுத் தலைவர் சதாம் உசேன் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது[2]; இந்த ஊரையும் இங்குள்ள மையப் பள்ளிவாசலையும் கட்டுவதற்கு அவர் பெரும் நிதியுதவி வழங்கியுள்ளார். 1978இல் வெள்ளத்தால் இப்பகுதி பாதிக்கப்பட்டபோது உள்ளாட்சி அலுவலர்கள் ஈராக்கிய தூதரகத்தை உதவி கோரி நாடியதிலிருந்து சதாம் உசேன் இந்த ஊரின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டார். இங்குள்ள 100 வீடுகளைப் புனரமைத்து கல்விக்கூடத்தையும் பள்ளிவாசலையும் கட்டிட பேருதவி புரிந்தார்.
அமெரிக்கப் படைகள் சதாமை பிடித்த பிறகு, இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க கொள்கைகளை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads