சதுரங்கக் காய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சதுரங்கக் காய்கள் (Chess pieces) என்பன சதுரங்க விளையாட்டில் சதுரங்கப் பலகை மீது வைத்து விளையாடுவதற்கான காய்கள் ஆகும். ஆறு வகையான காய்கள் சதுரங்க விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொரு காயும் பலகையில் நகரும் முறைக்கமைய, அவற்றின் பெறுமதிகள் வேறுபடுகின்றன. இருவர் விளையாடும் இவ்விளையாட்டில் தொடக்கத்தில் ஒவ்வொருவருக்கும் பலகையில் பின்வருமாறு காய்கள் அடுக்கப்பட்டு இருக்கும்:
a | b | c | d | e | f | g | h | ||
8 | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | 8 | |||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
சதுரங்கக் காய்களின் தொடக்க நிலை. இயற்கணிதக் குறியீடுகளைப் பயன்படுத்திக் கட்டங்கள் குறியிடப்பட்டுள்ளன.[1]

Remove ads
சொற்கள்
சதுரங்கத்தில், "காய்" (piece) என்பது சூழ்நிலையைப் பொறுத்து மூன்று விதமாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
- இது பொதுவாக ஆறு வகைக் காய்களில் எதையும் குறிக்கக்கூடும்.
- விளையாட்டின்போது காலாட்களைத் தவிர பிற காய்களை மட்டுமே காய்கள் என்று குறிப்பிடுவது உண்டு. இக்காய்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது அரசியும் கோட்டையும், இரண்டாவது அமைச்சரும் குதிரையும், மற்றது அரசன்.
- விளையாட்டில் "வெல்லும் காய்", "தோற்கும் காய்" போன்ற பயன்பாடுகள் உண்டு. இவ்வேளைகளில் "காய்" என்பது அமைச்சர் அல்லது குதிரையையே குறிக்கும். அரசி, கோட்டை, காலாள் ஆகியவற்றை அவற்றின் பெயரைப் பயன்படுத்தி "வெல்லும் அரசி", "தோற்கும் கோட்டை" என்றவாறே குறிப்பிடுவர்.
- அரசி மற்றும் கோட்டைகளை பெருங் காய்கள் என்றும் அமைச்சர் மற்றும் குதிரைகள் சிறுங் காய்கள் என்றும் பொதுவாக குறிப்பிடுவதும் உண்டு.
சூழ்நிலைகளைப் பொறுத்தே காய் என்பதன் பொருள் விளக்கம் பெறுகிறது.
Remove ads
நகர்வுகள்
ஒவ்வொரு காயும் பலகையில் வெவ்வேறு விதமாக நகர்கின்றது.
- கோட்டை, வெறுமையான கட்டங்களில் முன்னோக்கியோ, பின்னோக்கியோ, இடமோ, வலமோ ஒரு நேர்கோட்டில் எவ்வளவு தூரமும் நகரக்கூடியது.
- அமைச்சர், வெறுமையான கட்டங்களில் மூலைவிட்டத் திசையிலான நேர்கோட்டில் எவ்வளவு தூரமும் நகரலாம்.
- அரசி, வெறுமையாக உள்ள கட்டங்களில் எந்தத் திசையிலும் வேண்டிய அளவு தூரம் நகர முடியும்.
- அரசன், கட்டங்கள் வெறுமையாக இருந்தால் எந்தத் திசையிலும் ஒரு கட்டம் மட்டுமே நகரக்கூடும்.
- குதிரை, 2 x 3 கட்ட அளவு கொண்ட நீள்சதுரத்தில் ஒரு மூலையில் இருந்து எதிர் மூலைக்கு நகரும். அதாவது "ட" வடிவம்.
- காலாள் பொதுவாக முன்னோக்கி ஒரு கட்டம் மட்டுமே நகரும். விரும்பினால், முதல் நகர்வின் போது முன்னோக்கி இரண்டு கட்டங்கள் நகரச் சதுரங்க விதிமுறைகளில் வழியுண்டு. ஆனால், முன்னோக்கிய மூலைவிட்டத் திசைகளில் அடுத்த கட்டத்தில் எதிரிக்காய் இருக்கும்போது காலாள் மூலைவிட்டத் திசையில் ஒரு கட்டம் நகர்ந்து அதனை வெட்ட முடியும்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads