சதுரங்க உலகக் கோப்பை 2023

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சதுரங்க உலகக் கோப்பை 2023 (Chess World Cup 2023 அல்லது FIDE World Cup 2023), என்பது 206 சதுரங்க ஆட்ட வீரர்கள் கலந்து கொண்ட ஒற்றை-வெளியேற்ற சதுரங்கப் போட்டியாகும். இது அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் 2023 சூலை 30 முதல் ஆகத்து 24 வரை நடைபெற்றது.[1] இது 10-ஆவது சதுரங்க உலகக் கோப்பைப் போட்டிகள் ஆகும். இப்போட்டிகளுடன் 2023 மகளிர் உலக சதுரங்க கோப்பை போட்டி பக்கூவில் நடைபெற்றது.

விரைவான உண்மைகள் தொடர் விபரம், விளையாட்டு ...

நடப்பு உலகக் கோப்பை வாகையாளர் சான்-கிறிசித்தோபு தூடா,[2][3] ஐந்தாவது சுற்றில் பபியானோ கருவானாவிடம் தோற்று போட்டியில் இருந்து விலகினார்.[4] 2023 ஆகத்து 24 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முன்னாள் உலக வாகையாளரும், நடப்பு முதல்-தர வீரருமான நார்வேயின் மாக்னசு கார்ல்சன், இந்தியாவின் ர. பிரக்ஞானந்தாவை வென்று தனது முதலாவது உலகக் கோப்பையைக் கைப்பற்றினார்.[5] மூன்றாம் இடத்தை அமெரிக்காவின் பபியானோ கருவானாவும், நான்காம் இடத்தை அசர்பைஜானின் நிசாத் அபாசொவும் பெற்றனர்.

வழக்கமாக இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் அடுத்த வாகையாளருக்கான 2024 வேட்பாளர் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள், ஆனால் மாக்னசு கார்ல்சன் வேட்பாளர் போட்டியில் விளையாடத் தான் விரும்பவில்லை என அறிவித்து விட்டதால், ஏனைய அரையிறுதி வீரர்கள் தகுதி பெறுவார்கள்.[6][7]

Remove ads

போட்டி வடிவம்

இந்தப் போட்டி எட்டுச் சுற்று முடிவாட்டப் போட்டியாகும். இதில் தரவரிசையில் முதல் 50 இற்குள் உள்ளவர்கள் நேரடியாக இரண்டாவது சுற்றிற்கு செல்வார்கள். இரண்டு அரையிறுதியில் தோற்றவர்கள் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் விளையாடுகிறார்கள். முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் வீரர்கள், அடுத்த உலக சதுரங்க வாகைக்கான சவாலைத் தீர்மானிக்கும் போட்டியான 2024 வேட்பாளர்கள் போட்டிக்குத் தகுதி பெறுகின்றனர்.

ஒவ்வொரு சுற்றிலும் முதல் இரண்டு நாட்களில் மரபு நேர வரம்பு ஆட்டங்களும், தேவைப்பட்டால் மூன்றாவது நாளில் சமன்-முறி (tie-break) ஆட்டங்களும் இருக்கும். நேர வரம்புகள் பின்வருமாறு:

  • இரண்டு மரபு ஆட்டங்களுக்கான நேர வரம்பு: 90 நிமிடங்கள், மேலும் 40-ஆவது நகர்வில் 30 நிமிட அதிகரிப்பு, மேலும் ஒரு வீரருக்கு நகர்வு 1 இலிருந்து 30-வினாடி அதிகரிப்பு.
  • மரபு ஆட்டங்களுக்குப் பிறகு போட்டி சமநிலையில் இருந்தால், வீரர்கள் இரண்டு விரைவு ஆட்டங்களை விளையாடுவார்கள், 25 நிமிடங்களும், ஒரு ஆட்டத்திற்கு 10-வினாடி அதிகரிப்பும்.
  • போட்டி இப்போதும் சமநிலையில் இருந்தால், வீரர்கள் மேலும் இரண்டு விரைவு ஆட்டங்களை விளையாடுவார்கள், ஒரு வீரருக்கு 10 நிமிடங்களும், ஒரு நகர்வுக்கு 10-வினாடி அதிகரிப்பும்.
  • போட்டி இப்போதும் சமநிலையில் இருந்தால், வீரர்கள் இரண்டு பிளிட்சு (புயல்வேக) ஆட்டங்களை விளையாடுவார்கள், ஐந்து நிமிடங்களும், ஒரு வீரருக்கு ஒரு நகர்வுக்கு மூன்று வினாடி அதிகரிப்பும்.
  • ஆட்டம் இப்போதும் சமநிலையில் இருந்தால், போட்டியைத் தீர்மானிக்க மூன்று நிமிடங்கள் மற்றும் ஒரு நகர்வுக்கு இரண்டு வினாடி அதிகரிப்புடன் ஒற்றை பிளிட்சு விளையாட்டு விளையாடப்படும். ஒரு தீர்க்கமான முடிவு கிடைக்கும் வரை வீரர்கள் வண்ணங்களை மாற்றி மாற்றி விளையாடுவார்கள்.
Remove ads

போட்டியாளர்கள்

இப்போட்டியில் உலகம் முழுவதிலிருந்து 206 சதுரங்க கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.[8] உலகக்கோப்பை சதுரங்கப் போட்டித் தொடரில் இந்தியாவின் ர. பிரக்ஞானந்தா மற்றும் நார்வேயின் மாக்னசு கார்ல்சன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.[9]

சுற்றுகள் 1–4

போட்டியிடும் 206 பேரும் 16 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 4 சுற்றுகள் விளையாடுவார்கள். ஒவ்வொரு பிரிவிலும் இருந்து 4-ஆம் சுற்றில் வெற்றி பெறுபவர் அடுத்த சுற்றில் விளையாடத் தகுதி பெறுவார்.[10]

சுற்றுகள் 5–8

ஐந்தாம் சுற்று காலிறுதி அரையிறுதி இறுதி
            
1 நோர்வே மாக்னசு கார்ல்சன் 2
49 உக்ரைன் வசீல் இவான்சுக் 0
1 நோர்வே மாக்னசு கார்ல்சன்
8 இந்தியா குகேஷ் ½
24 சீனா வாங் காவோ ½
8 இந்தியா குகேஷ்
1 நோர்வே மாக்னசு கார்ல்சன்
69 அசர்பைஜான் நிசாத் அபாசொவ் ½
69 அசர்பைஜான் நிசத் அபாசொவ் 2
53 ஐக்கிய அரபு அமீரகம் சாலெம் சாலே 0
69 அசர்பைஜான் நிசத் அபாசொவ்
20 இந்தியா விதித் சந்தோசு குச்ராத்தி ½
20 இந்தியா விதித் சந்தோசு குச்ராத்தி 4
4 பிடே இயான் நிப்போம்னிசி 2
1 நோர்வே மாக்னசு கார்ல்சன்
31 இந்தியா ர. பிரக்ஞானந்தா
3 ஐக்கிய அமெரிக்கா பபியானோ கருவானா
14 போலந்து யான்-கிசிசுத்தொவ் தூடா ½
3 ஐக்கிய அமெரிக்கா பபியானோ கருவானா
11 ஐக்கிய அமெரிக்கா லீனியர் தொமிங்கசு ½
11 ஐக்கிய அமெரிக்கா லீனியர் தொமிங்கெசு
38 செர்பியா அலெக்சி சரானா ½
3 ஐக்கிய அமெரிக்கா பபியானோ கருவானா
31 இந்தியா ர. பிரக்ஞானந்தா
39 சுவீடன் நில்சு கிராண்டேலியசு ½ மூன்றாம் இடம்
23 இந்தியா அர்ச்சூன் எரிகாய்சி
23 இந்தியா அர்ச்சூன் எரிகாய்சி 4 69 அசர்பைஜான் நிசாத் அபாசொவ் 1
31 இந்தியா ர. பிரக்ஞானந்தா 5 3 ஐக்கிய அமெரிக்கா பபியானோ கருவானா 3
82 அங்கேரி பெரெங்க் பெர்க்சு ½
31 இந்தியா ர. பிரக்ஞானந்தா

மூன்றாம் இடம்

மேலதிகத் தகவல்கள் தரம், பெயர் ...

இறுதி

மேலதிகத் தகவல்கள் தரம், பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads