சதுரங்க மேதை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சதுரங்க மேதை (chess prodigy) என்று அழைக்கப்படும் குழந்தை, அனுபவம் வாய்ந்த வயதுவந்த சதுரங்க வீரர்கள் மற்றும் சதுரங்க மாசுட்டர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறும் திறமை கொண்ட குழந்தையைக் குறிக்கும். சதுரங்க உலகில் அத்தகைய குழந்தைகள் மிது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். எதிர்பார்க்கப்பட்ட்து போலவே சிலர் உலக சாம்பியன்களாக மாறுகிறார்கள். மற்றவர்கள் முதியவர்களாக மாறும்போது சிறிய அளவு முன்னேற்றம் அல்லது எந்தவிதமான மேம்பாட்டையும் அடையாமல் தொலைந்து போகிறார்கள்.
Remove ads
பழங்கால சதுரங்க மேதைகள்
1837-1884 ஆண்டுகளில் வாழ்ந்த பால் மார்பியும், 1888-1942 ஆண்டுகளில் வாழ்ந்த யோசு ராவுல் கேப்பிளாங்காவும் ஆரம்பகால சதுரங்க மேதைகளாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் தங்கள் பனிரெண்டாவது வயதிலேயே வலிமையான சதுரங்க வீர்ர்களை வீழ்த்தி சாதனை புரிந்தனர். 1911-1992 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சாமுவேல் ரெசெவ்சுகியும் அதே நேரத்தில் தன்னுடைய ஆறாவது வயதிலேயே இதுபோலவே சதுரங்க மேதையாகத் திகழ்ந்தார். அதிகாரப்பூர்வமாக உலக சாம்பியன் பட்டம் அறிவிக்கப்படாத காலத்திலேயே சதுரங்க மேதையான மார்பி உலக சாம்பியனாகக் கருதப்பட்டார். சதுரங்க மேதையான கேப்பிளாங்கா பிற்காலத்தில் மூன்றாவது உலக சாம்பியன் என்ற பட்டத்தை பெற்றார். சாமுவேல் ரெசெவ்சுகி இறுதிவரை இப்பட்டத்தை பெறாமலேயே வலிமையான ஐந்து சதுரங்க வீர்ர்கள் என்ற பட்டியலில் இடம்பிடித்து பல பத்தாண்டுகளுக்கு நிலையாக நீடித்தார்.
Remove ads
இளைய கிராண்டு மாசுட்டர்களின் பட்டியல்
ஒரு சதுரங்க வீர்ர் கிராண்டு மாசுட்டர் பட்டத்தைப் பெறும் வயது 1950 களில் சதுரங்க மேதை என அழைக்கப்படுவதற்கான அளவுகோலாக இருந்தது. தற்போது கிராண்டு மாசுட்டர் பட்டத்திற்கான தகுதியை அடைந்த நாளில் உள்ள வயது அளவு கோலாக கருதப்படுகிறது. ஏனெனில் தகுதியை அடைந்த நாளும் கிராண்டு மாசுட்டர் பட்டம் பெற்ற நாளும் ஒன்றாக இருப்பதில்லை. கிராண்டு மாசுட்டர் பட்டம் பிடே அமைப்பின் கூட்டம் நடைபெறும்போதுதான் வழங்கப்படுகிறது. குறிப்பு: கிராண்டு மாசுட்டர் பட்டம் வழங்கப் பட்டபோது வீர்ர்கள் வசித்த நாடு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தற்போதைய வசிப்பிடம் கணக்கில் கொள்ளப்படவில்லை.
15 ஆவது பிறந்த நாளுக்கு முன்பே கிராண்டு மாசுட்டர் பட்டம் வாங்கியவர்களின் பெயர் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
இளைய பெண் கிராண்டு மாசுட்டர்கள் பெயர் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads