சத்தியேந்திர குமார் ஜெயின்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்தியேந்திர குமார் ஜெயின் (Satyendar Kumar Jain) ஆம் ஆத்மி கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசின் அமச்சரவையில் 28 டிசம்பர் 2013 முதல் 28 பிப்ரவரி 2023 முடிய பதவி வகித்தவர்.[1] இவர் தில்லி அரசின் சுகாதாரம் & குடும்ப நலம், தொழில்கள், உள்துறை, மின்சாரம், குடிநீர், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக செயல்பட்டவர்.
இவர் பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குனரகத்தால் 31 மே 2022 அன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.[2] 28 பிப்ரவரி 2023 அன்று இவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[3][4]மே 2023ல் சத்தியேந்திர குமார் ஜெயின் மீது நடுவண் புலனாய்வுச் செயலகம் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தது.[5]
Remove ads
இடைக்கால ஜாமீன்
26 மே 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் பண மோசடி வழக்கில் சிறை சென்ற சத்தியேந்திர குமார் ஜெயினுக்கு மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கியது.[6] பிறகு அவர் நிரந்தர ஜாமின் கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார். இதனை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் திகார் சிறைக்கு திரும்பினார்.
ஜாமீன்
பணமோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சத்யேந்தர் ஜெயினுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியதால், திகார் சிறையிலிருந்து வீட்டிற்கு திரும்பினார்.[7]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads