ஆம் ஆத்மி கட்சி

இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

ஆம் ஆத்மி கட்சி
Remove ads

ஆம் ஆத்மி கட்சி (ஆங்கிலம்: Aam Aadmi Party; தேவநாகரி: आम आदमी पार्टी; மொ.பெ.சாதாரண மனிதனின் கட்சி; சுருக்கம் ஆ.ஆ.க.) 2012 இல் ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட இந்திய அரசியல் கட்சியாகும். இது, சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவாலால் 26 நவம்பர் 2012ல் தில்லியில் தொடங்கப்பட்டது.[22][23]

விரைவான உண்மைகள் ஆம் ஆத்மி கட்சி, சுருக்கக்குறி ...

ஜன் லோக்பால் மசோதாவைக் கோரி 2011-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் இயக்கத்தை அரசியலாக்க வேண்டும் என்ற சிந்தனையில் இந்த கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கினார்.

இந்தக் கட்சி உருவாகியது முதல், ஊழலுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது. டெல்லியில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் விலை ஏற்றத்திற்கு காரணம் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கழகங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தியது. கற்பழிப்பிற்கு எதிரான கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்தக் கோரி, கற்பழிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது.[24][25][26]

2013 தில்லி சட்ட பேரவை தேர்தலில் அறிமுகமான இந்தக் கட்சி தில்லியில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2013 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் படி இக்கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களை வென்றது.[27].

Remove ads

தேர்தல் ஆணைய அங்கீகாரம்

ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சி அங்கீகாரம் அளித்துள்ளது. அதாவது, இந்திய தேர்தலில் குறைந்தது மூன்று சதவிகித இடங்களை கைப்பற்றும் அல்லது மொத்த வாக்குகளில் குறைந்தது 6 சதவிகித வாக்குகளைப் பெறும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும். அதன்படி தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைக் கைப்பற்றியுள்ளதால், அக்கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலும், தேர்தலில் போட்டியிட பயன்படுத்திய துடைப்பம் சின்னத்தையே, கட்சி சின்னமாக அங்கீகரித்தது. 2014 மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் நான்கு இடங்களில் வென்றதால் அங்கும் இக்கட்சிக்கு மாநில கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. [28]

Remove ads

சட்டமன்ற தேர்தல்

தில்லி சட்டமன்ற தேர்தல் (2013)

தில்லி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இக்கட்சி 28 இடங்களில் வென்றது. 8 இடங்களில் வென்ற காங்கிரசு வெளியில் இருந்து ஆதரிப்பதாக ஆளுநருக்கு கடிதம் மூலம் சொன்னதால்[29][30] இக்கட்சி ஆட்சி அமைக்கிறது. புது தில்லி தொகுதியில் வென்ற அரவிந்த் கெஜ்ரிவால் டிசம்பர் 28, 2013 அன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் [31].[32] இக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் வினோத் குமார் பின்னி தனது ஆதரவை விலக்கிக்கொண்டார். [33][34] ஜன லோக்பால் என்ற சட்டத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததால் அறிவித்த படி இக்கட்சியின் முதல்வர் கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் பதவி விலகினர்[35][36]

தில்லி சட்டமன்ற தேர்தல் (2015)

2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தில்லியின் 67 தொகுதிகளில் இக்கட்சி வெற்றி பெற்றது. மீதி மூன்று இடங்களை பாஜக பெற்றது.

தில்லி சட்டமன்ற தேர்தல்(2020)

2020 ஆன் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 62 தொகுதிகளில் இக்கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மீதி 8 தொகுதிகளை பாஜக வென்றது.[37]

Remove ads

மக்களவை தேர்தல்

2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தலில் இக்கட்சி நாட்டின் பல பகுதிகளில் போட்டியிட்டாலும் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் நான்கு இடங்களில் வென்றது.

தமிழகம்

இந்தியா முழுவதும் 2.5 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ள இக்கட்சியில், தமிழகத்தில் புதிதாக 30 ஆயிரம் பேர் சேர்ந்தனர்.[38] மொத்தமாக தமிழகத்திலிருந்து இதுவரை 42,000 பேர் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.[39] ஆம் ஆத்மி கட்சி என்று வழங்கப்பட்டு வந்ததை, தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் சு. ப. உதயகுமார் இதனை தமிழில் எளிய மக்கள் கட்சி என பெயர் மாற்றி அழைத்தார்.[40]

ஆம் ஆத்மி அரசு செய்த சாதனைகள்

ஆம் ஆத்மி கட்சி தான் பதவி வகித்த 49 நாட்களில், ஊழலுக்கு எதிரான பல பணிகளை செய்து முடித்தது.[41]

  1. டெல்லியில் உள்ள வீடுகளுக்கு மாதம் 700 லிட்டர் இலவச குடிநீர் திட்டம்.
  2. 400 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் உபயோகித்தவர்களுக்கு மின்கட்டணம் பாதியாக குறைப்பு.
  3. காமன் வெல்த் விளையாட்டு ஊழலுக்கு எதிராக பல வழக்குகளை தொடர்ந்தது.
  4. ஊழலுக்கு எதிரான இலவச அழைப்பு மையத்தை ஏற்படுத்தியது.
  5. டெல்லி பல்கலைகழகத்தில் டெல்லி மாணவர்களுக்கு 90% சதவிகித இட ஒதுக்கீட்டை ஒதுக்கியது.
  6. ஊழலுக்கு எதிரான வலுவான சட்டம் என்று கருதப்படும் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யவிடாமல் பா.ஜ.கவும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் எதிர்த்தால், ஆம் ஆத்மி கட்சி தான் கூறியவாறு தனது அரசை கலைத்தது.
  7. எரிவாயு சிலிண்டர் விடயத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் செய்த ஊழல் காரணமாக முகேஷ் அம்பானி, வீரப்ப மொய்லி, மற்றும் முரளி தேரோக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது.
Remove ads

வரவேற்பு

இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு, சுமார் "பதினாறு லட்சம் மக்கள்" இதுவரை ஆதரவு தெரிவித்தனர்.[42]

ஆவணப்படம்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பற்றியும் அக்கட்சியின் வளர்ச்சிப் பற்றியும் குஷ்பு ரங்கா மற்றும் வினை சுக்லா இயக்கத்தில் ஆனந்த் காந்தி தயாரிப்பில், வைஸ் (Vice) செய்தி நிறுவனம் An Insignificant Man என்ற முழுநீள ஆவணப்படத்தை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 19 தேதி அன்று வெளியிட்டது.[43]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads