சத்தியோசாதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்யோ சோதம் என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான இது படைத்தல் பணிபுரியும் முகமாகக் கருதப்படுகிறது.
சிவத்தோற்றம்
சத்யோ சோதத்தினை சிவபெருமானின் ஐவ்வகை தோற்றத்தில் முதலாவது தோற்றமாக மகாபுராணங்களில் ஒன்றான லிங்க புராணத்தில் விவரித்துள்ளது. சுவாத லோகித கற்பத்தில் பிரம்ம தேவன் சிவபெருமானை வணங்கி தியானிக்கும் போது சிவபெருமான் தோன்றினார். அப்பொழுது மிகவும் அழகிய இளம் பாலகனாக அவர் இருந்தார். [1]
சிவமுகம்
சிவபெருமானின் ஐந்து முகங்களில் முதல் முகமாகும். தத்புருஷம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்முகம் பால் வண்ண வெண்மை நிறமுடையதெனவும், மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளாகவும் அறியப்படுகிறது. சிவபெருமானின் இம்முகம் முனி தாண்டவம் புரிந்து படைக்கும் பணிபுரியும் முகமாகும்.பஞ்சபூதங்களில் நிலத்தின் தன்மை வாய்ந்ததாக இம்முகம் அறியப்படுகிறது.
சிவபெருமானின் இந்த சத்யோசோத முகத்திலிருந்து காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம் என ஐந்து ஆகமங்களை தோற்றுவித்தார். [2]
Remove ads
மேற்கோள்களும் குறிப்புகளும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads