சத்திரம் காசி விசுவநாதர் கோயில்

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சத்திரம் காசி விசுவநாதர் கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

விரைவான உண்மைகள் காசிவிசுவநாதர் கோயில், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

இக்கோயில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் சத்திரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக காசி விசுவநாதர் உள்ளார். இறைவி அன்னபூரணி ஆவார். கோயிலில் தெப்பக்குளம் உள்ளது. கோயிலின் உள்ளே தீர்த்தக்கிணறு உள்ளது.[1]

அமைப்பு

சுமார் 1100 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் என்பதை கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது. காசியின் நேர்ப் பார்வையில் இக்கோயில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். முன் மண்டபத்தை அடுத்து கொடி மரம் காணப்படுகிறது. தென் திசை நோக்கி இறைவியை தரிசிக்கும் வகையில் நந்தி காணப்படுகிறது. அருகில் மூலவர் சன்னதி உள்ளது. இறைவி சன்னதி வடக்கு நோக்கி உள்ளது. இங்கு நவக்கிரகங்கள் காணப்படவில்லை.சப்த கன்னியருடன் தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது. சனீசுவரர், கால பைரவர், கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகன் ஆகியோர் உள்ளனர். இக்கோயிலில் சிவன் அன்னபூரணியுடன் காணப்படுகிறார்.[1]

விழாக்கள்

பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி, வைகாசிப் பெருவிழா உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads