சத்யமேவ ஜெயதே
இந்திய நாட்டின் தேசிய குறிக்கோள் உரை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்யமேவ ஜெயதே (தமிழ்: வாய்மையே வெல்லும், ஆங்கிலம்: Truth alone triumphs) என்பது முண்டக உபநிடத்தின் புகழ்பெற்ற ஒரு மந்திரத்தின் ஒரு பகுதியாகும்.[1] இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, 26 சனவரி 1950 அன்று, இந்தியா குடியரசாக மாறிய நாளில் இந்திய தேசிய குறிக்கோளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[2][3]

இது அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதியின் அடிவாரத்தில் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது, இந்திய தேசிய இலச்சினையின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ளது. அனைத்து இந்திய ரூபாய்களிலும், தேசிய ஆவணங்களிலும் சின்னம் மற்றும் "சத்யமேவ ஜெயதே" என்ற சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
Remove ads
தோற்றம் மற்றும் பொருள்
இக்குறிக்கோள் முண்டக உபநிடதத்தில் 3.1.6வது மந்திரத்தில் உள்ளது. மந்திரமும் மொழிபெயர்ப்பும் பின்வருமாறு:
- தேவநாகரி எழுத்துமுறையில்
सत्यमेव जयते नानृतं सत्येन पन्था विततो देवयानः।
येनाक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत् सत्यस्य परमं निधानम्॥[1]
- எழுத்துப்பெயர்ப்பு
- ஆங்கிலத்தில்
satyameva jayate nānṛtaṃ
satyena panthā vitato devayānaḥ
yenākramantyṛṣayo hyāptakāmā
yatra tat satyasya paramaṃ nidhānam[4]
- தமிழில்
ஸத்யமேவ ஜயதே நாந்ருதம்
ஸத்யேன பந்தா2 விததோ தே3வயான: ।
யேனாக்ரமந்த்ய்ருஷயோ ஹ்யாப்தகாமா:
யத்ர தத்ஸத்யஸ்ய பரமம் நிதா4னம் ॥[5]
- மொழிப்பெயர்ப்பு
சுவாமி குருபரானந்தர் வழங்கிய தமிழ் உரை:
வாய்மையே வெல்லும். பொய்மை வெல்லாது. எந்த ப்ரஹ்ம லோகத்தில் ஸத்யத்தினால் அடையப்படும் அந்த மேலான லக்ஷ்யம் உண்டோ.
அந்த லோகத்தை ஆசைகள் நீங்கிய ரிஷிகள் எந்தப் பாதையினால் அடைகிறார்களோ, அந்த ஒளி பொருந்திய பாதை ஸத்யத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.[5]
Remove ads
தமிழ்நாடு அரசு இலச்சினையில் தமிழாக்கம்

இந்தியா விடுதலை அடைந்த பிறகு, இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்நாடு அரசு இலச்சினையில் தேவநாகரி எழுத்தில் "சத்யமேவ ஜெயதே" என இருந்தது, இதை "வாய்மையே வெல்லும்" என்று 1967ஆம் ஆண்டு கா. ந. அண்ணாதுரை முதலமைச்சராக இருந்த காலத்தில் மாற்றப்பட்டது.[6][7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads