சத்ரு (2019 திரைப்படம்)

2019 ஆண்டைய திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சத்ரு (Sathru 2019 film) ஒரு இந்திய மொழி தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை நவீன் நஞ்சுண்டான் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இயக்குனருக்கு அறிமுக திரைப்படமாகும்[1] இத்திரைப்படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் துணை கதாபாத்திரங்களாக லகுபரன் பொன்வண்ணன் பவன் நீலிமா ராணி ஜி மாரிமுத்து சுஜா வாருணி மற்றும் ரிசி ஆகியோர் நடித்துள்ளனர்.[2][3] இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் நாள் திரைக்கு வந்தது. இரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விரைவான உண்மைகள் சத்ரு, இயக்கம் ...
Remove ads

கதைக்களம்

கதிரேசன் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. பணியின் மீது அவருக்குள்ள பற்று மற்றும் நேர்மை குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஊட்டுவதாக இருந்தது. அவருடைய விசாரணை செய்யும் முறை இரக்கமற்ற தாகவும் இருந்தது. கதிரின் இந்த அணுகுமுறை அவருடைய சகாக்களும் உயர் அதிகாரிகளுக்கும் ஊட்டுவதாக அமைந்திருந்தது. ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்தவர். கதிர் உடைய அப்பா ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி ஆவார். கதிரின் மூத்த சகோதரன் விஷ்வாவும் ஒரு இராணுவ வீரர். கதிர் தனது தந்தை மைத்துனி மருமகள் சுருதி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் என்ற தீய எண்ணம் கொண்ட இளைஞர் தனது நண்பர்களுடன் வசித்து வருகிறார். பணம் சம்பாதிப்பதற்காக இளங்குழந்தைகளைக் கடத்தி வைத்துக் கொண்டு அவர்களின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் பறிப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். ஒரு முறை அவர்கள் மகேந்திரன் என்ற பணக்காரர் ஒருவரின் மகனைக் கடத்திச் செல்கின்றனர். மகேந்திரன் காவல் ஆணையரைத் தனிப்பட்ட முறையில் நன்கறிந்தவர் ஆவார். இந்த வழக்கு காவல் துறை வசம் செல்கிறது, பணக்காரக் குழந்தையுடன் சேர்த்து ஒரு ஏழைக் குழந்தையையும் அவர்கள் கடத்தியுள்ளனர். பிணயத்தொகையாக ஐந்து கோடிகள் கேட்கப்படுகிறது. காவல்துறை உதவி ஆணையர் இதைத் தாமதப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக ஏழைக் குழந்தையின் உயிர் பறிக்கப்படுகிறது. தனது மகனின் வாழ்வைப் பற்றிய பயத்தின் காரணமாக மகேந்திரன் ஐந்து கோடிகளைக் கொடுக்கிறார். அப்பொழுது பிரபா கதிரிடம் அந்தத் தொகையை தொடருந்தில் வரும் பெண் ஒருவரிடம் கொடுக்கச் சொல்கிறான். அதன்படி, கதிர் தன் மகனுடன் வரும் ஒரு பெண்ணிடம் பணத்தைத் தருகிறான். அந்தப் பெண் பயணம் செய்யும் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் கதிர் பயணிக்கிறான். ஒருவன் அந்தப் பெண்ணை அறைந்து விட்டு பணத்துடன் தப்புகிறான். கதிர் ஒரு அடுக்குமாடித் தளத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கு அவன் குட்டி என்பவனைக் கொன்று குழந்தையைக் காப்பாற்றுகிறான். காவல் துறை கதிர் குற்றவாளியைக் கொன்றமைக்காக பணியிடை நீக்கம் செய்கிறது.

கடத்தல்காரர்கள் தங்களின் நண்பனின் மரணத்திற்காக கதிர் மீது கோபம் கொண்டு அவனை பழிதீர்க்க உறுதி எடுக்கின்றனர். அவர்கள் சுருதி பள்ளியிலிருந்து திரும்பி வரும் போது விபத்துக்குள்ளாக்குகின்றனர். ஒட்டு மொத்தக் குடும்பமும் மருத்துவமனைக்கு விரைகிறது. கடத்தல்காரர்கள் குழந்தையைக் கொல்ல மருத்துவமனைக்கும் வருகிறார்கள். அங்கு கதிர் இருந்த காரணத்தால் சுருதியைக் கொல்ல அவர்களால் இயலவில்லை.

கடத்தல்காரர்கள் தங்களின் நண்பனின் மரணத்திற்காக கதிர் மீது கோபம் கொண்டு அவனை பழிதீர்க்க உறுதி எடுக்கின்றனர். அவர்கள் சுருதி பள்ளியிலிருந்து திரும்பி வரும் போது விபத்துக்குள்ளாக்குகின்றனர். ஒட்டு மொத்தக் குடும்பமும் மருத்துவமனைக்கு விரைகிறது. கடத்தல்காரர்கள் குழந்தையைக் கொல்ல மருத்துவமனைக்கும் வருகிறார்கள். அங்கு கதிர் இருந்த காரணத்தால் சுருதியைக் கொல்ல அவர்களால் இயலவில்லை. கடத்தல் கும்பலைச் சார்ந்த ஒருவன் கதிரை தொலைபேசியில் அழைத்து மிரட்டுகிறான். கதிரின் தந்தை ஒரே நாள் கால அளவிற்குள் அவர்கள் அனைவரையும் கொல்லச் சொல்கிறார். கதிர் அந்த நபரைக் கண்டுபிடித்துக் கொல்கிறார். சேகர் என்பவன் அங்கு நுழைகிறான். கதிர் மற்றும் அவனது நண்பர்கள் அருண் மற்றும் பாண்டியனைக் கண்டதும் விரைந்து தப்புகிறான். அவன் தகவலை பிரபாவிற்கு கூறிய பின் அவர்களால் கொல்லப்படுகிறான். கதிரும் அவனது நண்பர்களும் பிரபாவின் இடத்திற்குச் சென்றடைந்த பிறகு அங்கு யாரையம் காணாமல் அதிர்ச்சி அடைகின்றனர். பிரபா இவ்வளவிற்குப் பிறகும் ஒவ்வொருவரையும் கொல்ல முயற்சிக்கிறான். கதிரின் மைத்துனி, பெற்றோர் ஆகியோரைக் கொல்ல முயற்சிக்கும் போது கதிர் அவர்களைக் காப்பாற்றுகிறான். அவர்களை பாதுகாப்பிற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போது அவன் தொடருந்தில் கண்ட சிறுவனைக் காண்கிறான், அந்தச் சிறுவன் ஒரு பிக்பாக்கெட் என்பதையும் அந்தப் பெண் அவனின் தாயாரே இல்லை என்பதையும் உணர்கிறான். கதிர் அந்தப் பெண்ணின் பெயர் கஸ்தூரி என்பதை அறிகிறான், அநதப் பெண் இருக்கும் இடத்தை அறிய அந்தப் பையனை அழைத்து வருகிறான். அந்தத் தளமும் காலியாகவே உள்ளது.

கதிரின் தந்தை பிரபாவால் அவரது வீட்டில் கொல்லப்படுகிறார். கதிர் இத்தகவலைத் தனது குடும்பத்தினரிடம் இருந்து மறைக்கிறார். தன் குடும்பத்தினரை ஒரு மருத்துவமனையில் தங்க வைக்கிறார். அங்கும் அந்த கடத்தல் கார கும்பலில் இருவர் அங்கு வருகின்றனர். ஆனால், அங்கு காவலர்களையும் விஸ்வாவையும் பார்க்கின்றனர்.

Remove ads

நடிப்பு

  • கதிரேசனாக கதிர்
  • தர்சினியாக சிருஷ்டி டங்கே
  • பிரபாகரனாக லகுபரன்
  • கதிரேசனின் தந்தையாக பொன்வண்ணன்
  • கதிரேசனின் சகோதரன் விஷ்வாவாக பவன்
  • கதிரேசனின் மைத்துனியாக நீலிமா ராணி
  • எஸ். சங்கரலிங்கம், இந்திய காவல் துறைப் பணி அலுவலராக ஜி. மாரிமுத்து
  • கஸ்தூரியாக சுஜா வருணீ
  • மகேந்திரனாக ரிஷி
  • சுருதியாக சாவி சர்மா
  • பிரபாகரனின் நண்பன் குட்டியாக அருவி பாலாஜி
  • பிரபாகரனின் மற்றொரு நண்பனாக எஸ். குருமூர்த்தி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads