சந்தனக் காற்று (திரைப்படம்)
மணிவண்ணன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தனக் காற்று (Sandhana Kaatru) ) என்பது 1990 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். மணிவண்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜயகாந்த் மற்றும் கௌதமி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தனர். இப்படத்தை செங்கமலம் மணிவண்ணன் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இசையில் 1990 ஜூன் முதல் நாளில் இப்படம் திரையிடப்பட்டது [1][2]
Remove ads
கதைச் சுருக்கம்
காவலர்களின் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் அழகிரி (விஜயகாந்த்) மருத்துவமனையின் தீவிரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காட்சியுடன் படம் தொடங்குகிறது.. கடந்த காலங்களில் ராசாத்தி(கவுதமியை திருமணம் செய்து கொண்டு இராணுவத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி அழகிரி இராணுவ முகாமில் ஒரு சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ,அவரது மனைவி மற்றும் மகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ அவரைத்தேடி வருகிறார். அவர்கள் அழகிரியின் நண்பரும் அவரது உயராதிகாரியுமான சக்ரவர்த்தியின் மகன் வினு சக்ரவர்த்தி ராமுவின் (ஆர். சரத்குமார்) வீட்டிற்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களான விஸ்வநாத் (விஷ்ணு விஸ்வநாத்) மற்றும் விஜய் (விஜய் கிருஷ்ணராஜ்) ஆகியோர் இருவரும் இணைந்து ராசாத்தியை கிணடல் செய்த காரணத்தால் அவர்களை கன்னத்தில் அடித்ததை மறக்காமல் அவர்களை வரவேற்பது போல் நடிக்கின்றனர். நடந்த அவமானத்தை மறக்க இயலாத அவர்கள், ராசாத்தியை கற்பழிக்க முயற்சிக்கின்றனர்.ஆனால் அவள் அதற்கு முன் தற்கொலை செய்து கொள்கிறாள்.
இதையறிந்து கோபம் கொண்டு அவர்களை பழிக்குபழி வாங்கும் எண்ணத்துடன் அழகிரி முதலில் விஸ்வநாத்தை ஒரு பொது இடத்தில் வைத்து கொன்றுவிடுகிறார். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அழகிரிக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு ஒரு நாள் முன்பு, அவர் சிறையில் இருந்து தப்பி விடுகிறார், ஆனால் காவல் துறையால் அவர் விடாமல் துரத்தப்படுகிறார். முடிவில் காவல் துறையினர் அவரை கண்டுபிடித்து சுட்டு விடுகின்றனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அழகிரி தற்போது குணமடைகின்றார். அதே மருத்துவமனையில் ஒரு நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள விஜய்யை அழகிரி காண்கிறார், மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் தான் தங்கி மருத்துவம் பார்க்க வேண்டியிருப்பதாக காவலரிடமும் அழகிரி வேண்டுகோள் விடுவிக்கிறார். பின்னர், யாரும் சந்தேகிக்காதவாறு விஜய்யை கொலை செய்து விடுகிறார். பின்னர் மருத்துவமனையிலிருந்து செவிலியரின் உதவியுடன் அழகிரி தப்பி ஓடிவிடுகிறார். மீண்டும் காவலர்கள் அவரை கைது செய்வதற்கு முன்னர் ராமுவையும் கொலை செய்ய முடிவு செய்கிறார்.
Remove ads
நடிகர்கள்
- அழகிரியாக விஜயகாந்த்
- ராசாத்தியாக கவுதமி
- ராமுவாக ஆர்.சரத்குமார்
- மருத்துவர் சர்த்தாக சரத் பாபு
- சக்கரவர்தியாக வினு சக்ரவர்த்தி
- விஸ்வநாத்தாக விச்சு விஸ்வநாத்
- விஜய் விஜய் கிருஷ்ணராஜ்
பாடல்கள்
இந்த படத்திற்கு திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் இசையமைத்தனர். கவிஞர் வாலி,காரைக்குடி வெங்கடேஷ் மற்றும் ஜீவா பாரதி போன்றோர் பாடல்களை எழுத 1990 ல் வெளியிடப்பட்டது.[3][4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads