சந்தனா

From Wikipedia, the free encyclopedia

சந்தனா
Remove ads

மேஜர் சந்தனா (இறப்பு: சூன் 26, 2000, மயிலிட்டி, யாழ்ப்பாணம்) என்னும் இயக்கப் பெயர் கொண்ட குணசிங்கம் கவிதா தமிழீழ விடுதலைப் புலிகளில் கடற்கரும்புலியாக இருந்தவர்.


விரைவான உண்மைகள் கடற்கரும்புலி மேஜர் சந்தனா, பிறப்பு ...
Remove ads

விடுதலைப் போராட்டத்தில் இணைந்த காலம்

விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியில் இருந்த மேஜர் சந்தனா 1995 இல் கடற்கரும்புலி அணியில் இணைந்து கொண்டார்.

மறைவு

26 ஜூன், 2000இல் உகண' கப்பல் யாழ்குடா படைகளுக்குரிய ஆயுதங்கள், வெடிபொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றை ஏற்றிக்கொண்டு கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி கடற்படையின் இரு பீரங்கிப் படகுகள் மற்றும் 6 டோராப் படகுகள் சகிதம் பாதுகாப்பாக வந்துகொண்டிருந்தது. இக்கப்பல் பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து 55 கடல்மைல் தொலைவில் வைத்து கடற் புலிகளால் வழிமறிக்கப்பட்டு, கடற்புலிகளது சண்டைப்படகுகளும், கரும்புலிப்படகுகளும் கடலில் களமிறங்க, கடும் சமர் ஏற்பட்டது. சமர் நடுவே இலாவகமாக உள் நுழைந்த கரும்புலிப் படகுகள் உகண கப்பலுடன் மோதி வெடிக்க, உகண முற்றாக எரிந்து கடலில் மூழ்கியது. 10 கடற்படையினர் பலியாக கடற்படையினரின் டோராவும் சேதமாகிப்போனது. மேஜர் சந்தனா இதில் கொல்லப்பட்டார்[1].

சந்தனாவுடன் மரணம் அடைந்தவர்கள்

  • கடற்கரும்புலி லெப். கேணல் ஞானேந்திரன்
  • கடற்கரும்புலி மேஜர் ஆரன்
  • கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன்
  • கடற்கரும்புலி கப்டன் இளமதி
  • கப்டன் பாமினி
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads