மயிலிட்டி
இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள இடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மயிலிட்டி (Myliddy) என்பது இலங்கையின் ஒரு சிறிய ஊர் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே பலாலி, வடக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே தையிட்டி, தெற்கே கட்டுவன் ஆகியன இதன் எல்லைகளாக உள்ளன. இது யாழ்ப்பாணத்தின் முக்கியமான மீன்பிடிக் கிராமங்களில் ஒன்றாகும்.[1] இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகரைப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், பலாலி விமானப்படைத்தளம் ஆகியன இதனருகில் அமைந்துள்ளதால் இக்கிராமம் 1990-ஆம் ஆண்டு முதல் அதி-உச்ச பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தது. 27 ஆண்டுகளின் பின்னர், 2017 மே 3 இல் இப்பகுதி அவ்வூர் மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்பட்டது.[2][3] ஆனாலும், இவ்வூரின் அரைவாசிப் பகுதி தொடர்ந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.
Remove ads
இங்குள்ள கோவில்கள்
- முனையன்வளவு முருகையன் ஆலயம்
- மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
- தோப்புப் பிள்ளையார் ஆலயம்
- கொழுவியங்கலட்டி பிள்ளையார் ஆலயம்
- வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் கோவில்[8][9]
- மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலயம்
- ஆதிமயிலிட்டி காசிப்பூதராயர் ஆலயம்
- சங்குவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
- மயிலிட்டி தெற்கு - கட்டுவன் துறட்டையிட்டி ஞானவைரவர் ஆலயம்[10]
- மயிலிட்டி தெற்கு - கட்டுவன் வீரபத்திரர் ஆலயம்
- மயிலிட்டி வடக்கு புதுக்கிணற்று வைரவர் கோவில்
- ஆதிமயிலிட்டி பெரும்பரப்புப் பிள்ளையார் ஆலயம் (மயிலிட்டி வடக்கு)[11]
- குளத்தடி தேவியாகொல்லை கண்ணகி அம்மன் ஆலயம்
- மயிலுவக்கட்டை செல்வவிநாயகர் ஆலயம்
Remove ads
இங்குள்ள பாடசாலைகள்
- கலைமகள் மகா வித்தியாலயம்
- உரோமன் கத்தோலிக்கப் பாடசாலை
இங்கு பிறந்தவர்கள்
- நா. சண்முகலிங்கன், எழுத்தாளர், கல்வியாளர்
- சந்தனா, போராளி
இதனையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads