சந்தா சாகிப்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தா சாகிப் ஆற்காடு நவாப் அல்லது கர்நாடகா நவாப் ஆவார். தோஸ்த் அலி கானின் மகளை மணந்தவர்.
1740ல் தோஸ்த் அலி கானின் மறைவிற்குப் பின் ஆட்சிக்கு வந்த அவரது மகன் சப்தர்அலிகானுக்கும், மருமகனான சந்தா சாயபுவுக்கும், பதவி சண்டை வர ஆங்கிலேயர் சப்தர்அலிகானை ஆதரிக்க, சந்தா சாயபு தப்பி அருகில் உள்ள பிரெஞ்சு ஆளுகையில் இருந்த பாண்டிச்சேரிக்கு சென்று பிரெஞ்சியரிடம் தஞ்சம் அடைந்தார்.
இந்நிலையில் திருமலை நாயக்கர் வழியில் வந்த கடைசி ராணி மீனாட்சியின் ஆளுகையில் இருந்த திருச்சி கோட்டையை பிடிக்க சந்தா சாயபு சென்ற சமயத்தில் ஆங்கிலேய தளபதி ராபர்ட் கிளைவ் ஆற்காட்டைபிடித்து கொண்டார்.
பின்பு மராத்தியர்களுடன் நடந்த யுத்தத்தில் கைது செய்யப்பட்டு மகாராஷ்டிராவின் சத்தாரா சிறையில் அடைக்கப்பட்டார் சந்தா சாயபு.
பின்பு சந்தா சாயபுவின் குடும்ப ஆபரணங்களை கொண்டு 7.5 லட்சம் பணத்தை மராத்தியர்களிடம் செலுத்தி சந்தா சாயபுவை மீட்டார் கவர்னர் டூப்லெக்ஸ்.
பின்பு ஹைதராபாத் நிஜாம் முசாபர் ஜங்கு சந்தா சாயபுவை ஆற்காட் நவாபாக அறிவித்தார். அவரை தஞ்சைக்கு கொண்டு சிறையிலடைத்து வைத்து பின்பு கொன்றார்கள் மராத்தியர்கள்.
சந்தா சாகிப், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் காலத்தில் கர்நாடகப் பகுதியை நவாப் சுல்பிகார் அலி கானின் கீழ் ஆண்ட முசுலிம் சமூகத்தைச் சேர்ந்தவர். பிரான்சியருடன் கூட்டு வைத்திருந்த இவர், மதுரை நாயக்கர்களின் அரசை இணைத்துக்கொண்டதுடன், தஞ்சாவூரின் நவாப் ஆகவும் தன்னை அறிவித்துக்கொண்டார்.
தொடர்ச்சியாக இடம்பெற்ற மராட்டியத் தாக்குதல்களால் இவர் வலுவிழக்க நேர்ந்தது. இதனால், நாஸிர் ஜங்குடன் கூட்டுச் சேர்ந்திருந்த முகமது அலி கான் வாலாஜாவினால் தோற்கடிக்கப்பட்டார். மேலும், பிரித்தானியத் தளபதி ராபர்ட் கிளைவினாலும், மராட்டியப் பேரரசினாலும் தோல்வியுற்ற பின்னர் மீண்டும் தனது இழப்பைச் சரிசெய்ய முயன்றார். ஆனால் அவரது தஞ்சாவூர்ப் படையைச் சேர்ந்த இந்து வீரர்கள் விளைவித்த கலகம் ஒன்றின்போது தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.[1][2]
Remove ads
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads