ஆற்காடு நவாப்

From Wikipedia, the free encyclopedia

ஆற்காடு நவாப்
Remove ads

ஆற்காடு நவாப்புகள் (Arcot Nawab) என அழைக்கப்படுபவர்கள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கருநாடக பகுதிகளை ஆண்ட சுல்தான்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் இன்றைய சென்னை அருகில் உள்ள ஆற்காடு ஆகும். தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இவர்கள் பொதுவாக கருநாடக நவாப்புகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆட்சியின் பொழுதுதான் ஆங்கிலேயேர்கள் மொகலாய ஆட்சியாளர்கள் உதவியுடன் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தனர்.[1][2][3]

விரைவான உண்மைகள் ஆற்காடு நவாப்புகள், தலைநகரம் ...
மேலதிகத் தகவல்கள் தமிழக இசுலாமிய ஆட்சியாளர்கள் ...
Remove ads

வரலாறு

ஆற்காடு நவாப்புகள் கலிபா உமர் இப்புனு அல் கத்தாப்பு அவர்களின் வழிவந்தவர்கள் ஆவர். இவர்கள் 1692 ஆம் ஆண்டு மொகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப்பால் கருநாடக பிரதேசம் பகுதிகளில் வரிவசூல் செய்ய நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் நவாப்பு சுல்பிக்கார் அலி என்பவராவார். இவர் மராத்திய, விசயநகரப் பேரரசுகளை முறியடித்தார். மேலும் தனது ஆட்சிப்பகுதியை கிருட்டிணை ஆறு வரை பரப்பினார். பின்பு வந்த நவாப்பு தோத்து அலி கான் (1732–1740) என்பவர் தனது அரசை 1736 இல் மதுரை வரையில் விரிவுபடுத்தினார்.[4]

இதன் பிறகு 1749 ஆம் ஆண்டு முகமது அலி கான் வாலாசா என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சி மிகவும் அமைதியாகவும், சமய சகிப்புதன்மை உள்ளதாகவும் விளங்கியது. இவர் தனது நாட்டின் அனேகமான பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டதோடு, அங்கு இருந்த அனைத்து கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு நன்கொடைகளையும் அளித்தார். இன்றைய திருச்சிராப்பள்ளி திருவரங்கம் நகரில் உள்ள திருவரங்கநாதர் ஆலயமும் அவற்றில் ஒன்றாகும். இவர் 1765 இல் முகலாயப் பேரரசிற்கு கப்பம் கட்டுவதை மறுத்து, நவாப்பு ஆட்சியை சுதந்திர அரசாக அறிவித்தார்.

இதன் பிறகு இவர் தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி உடன் நட்புறவை மேற்கொண்டார். தனக்கு கீழ் உள்ள சமசுதானங்களை கட்டுப்படுத்த இவர் கம்பெனி படைகளை உபயோகப்படுத்தினார். மேலும் இவர் பிரெஞ்சுஐதர் அலி கூட்டுப் படையை எதிர்க்க ஆங்கிலேயற்கு ஆதரவாக போரிட்டார். இதன் காரணமாக இந்திய சுதந்திர உணர்விற்கு எதிரானவர் என்ற தோற்றத்தைப் பெற்றதோடு தனது அரசாட்சியின் பெரும்பகுதியை கிழக்கிந்தியக் கம்பெனியிடம் இழந்தார்.

இதன் பிறகு பதின்மூன்றாவது நவாப்பாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுசு கான் ( 1825–1855 ) தனக்கு பிறகு வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவகாசியிலிக் கொள்கையின் படி, கருநாடக பிரதேசம், ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது. இதன் பிறகு 1867 இல் குலாம் முகம்மது கவுசு கானின் சிறிய தந்தை ஆசிம் சா, பிரித்தானிய மகாராணி விட்டோரியாவிடம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி நவாப்பு ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர். அதற்கு பகரமாக வரிவசூலில் ஒரு பகுதியை ஓய்வுதியமாக ஆசிம் சா பெற்றார். மேலும் ஆற்காடு இளவரசர் என்றும் அங்கிகரிக்கப்பட்டார்.

இவரது பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் சென்னை நகரில் ஆற்காடு இளவரசர் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவும் இவர்களது பட்டத்தை அங்கீகரித்து, அரச குடும்பத்தினருக்கான ஓய்வூதியத்தை அளித்து வருகின்றது. இவர்களில் நடப்பு கடைசி ஆற்காடு இளவரசரான முகம்மது அத்துல் அலி ஆசிம் சா சூலை 1994 இல் பட்டத்துக்கு வந்தார்.

முந்தைய நவாப்புகள்

நவாப்பு சுல்பிகர் அலி கான் (1692–1703)
நவாப்பு தாவுது கான் (1703–1710)
நவாப்பு முகம்மது சதாத்துல்லா கான் I (1710–1732)
நவாப்பு தோத்து அலி கான்(1732–1740)
நவாப்பு சஃபுதார் அலி கான் (1740–1742)
நவாப்பு முகம்மது சதாத்துல்லா காண் ΙΙ (1742–1744)

Remove ads

பிந்தைய நவாப்புகள் (இரண்டாம் வம்சம்)

ஆற்காடு இளவரசர்கள் (கௌரவ அரசர்கள்)

நவாப்பு ஆசிம் சா (1867–1874)
நவாப்பு சர். சாகிருதுல்லா பகதூர் (1874–1879)
நவாப்பு இந்திசாம் உல் முழ்க் முசாலூதுல்லா பகதூர் (1879–1889)
நவாப்பு சர். முகம்மது முனாவர் அலி கான் பகதூர் (1889–1903)
சர். குலாம் முகம்மது அலி கான் பகதூர் (1903–1952)
நவாப்பு குலாம் முகையுதீன் கான் பகதூர் (1952–1969)
நவாப்பு குலாம் முகம்மது அத்துல் காதர் (1969–1993)
நவாப்பு முகம்மது அத்துல் அலி (1994 முதல்)

Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads