சந்தியா, நடிகை

தென்னிந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

சந்தியா (1924 - 1971) என்பவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவரது இயற்பெயர் வேதவல்லி என்பதாகும். திரைப்படங்களில் நடிப்பதற்காக சந்தியா என்ற பெயரை சூட்டிக்கொண்டார். இவர் பெரும்பாலும் துணை வேடங்களில் நாயகியின் சகோதரியாகவோ, தாயாகவோ நடித்தார். இவரது தங்கை வித்யாவதியும் ஒரு நடிகையாவார். சந்தியா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதாவின் தாயாராவார்.[1]

விரைவான உண்மைகள் சந்தியா, பிறப்பு ...
Remove ads

வாழ்கைக் குறிப்பு

இவர் பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணம், திருவரங்கத்தில் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தார். பின்னர் அன்றைய மைசூர் அரண்மனை காரியதர்சியும் அரண்மனை ராஜாங்க குடும்பத்து வழக்கறிஞர் ஜெயராமன் என்பவருக்கு இரண்டாவது மணைவியாக 1935 இல் தன் 11வது வயதில் வாழ்க்கைப்பட்டார். இத்தம்பதியருக்கு ஜெயகுமார் மற்றும் ஜெயலலிதா என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.[2] இவரது 26 வயதில் கணவரை இழந்தார். பிள்ளைகளைக் காப்பாற்ற வேதவல்லி தன் சகோதரி அம்புஜவல்லியுடன் (வித்யாவதி) திரைப்படங்களில் சந்தியா என்ற பெயரில் 1953 இல் நடிக்க வந்தார்.[3]

Remove ads

நடித்த திரைப்படங்கள்

  • மாயா பஜார் (1957)
  • கிருஷ்ணலீலலு (1959)
  • பலே பாண்டியா, விஞ்ஞானி சிவாஜிகணேசனின் மனைவியாக.
  • கர்ணன்
  • ஆசை அலைகள் (தமிழ்)
  • கற்கோட்டை (தமிழ் 1954 அறிமுகம்)
  • சமயசஞ்சீவி (தமிழ் 1957)
  • மணிமேகலை (தமிழ் 1959)
  • மலைக்கள்ளன் (தமிழ்)
  • பாக்தாத் திருடன் (தமிழ்)
  • படிக்காத மேதை
  • சம்பூர்ண ராமாயணம்
  • மரகதம்
  • குலமகள் ராதை
  • இருவர் உள்ளம்
  • காத்திருந்த கண்கள்
  • தெனாலிராமன்
  • பிள்ளைக் கனியமுது
  • சாரதா

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads