சந்தியா ராகம்
பாலுமகேந்திரா இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தியா ராகம் (Sandhya Raagam) 1989 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பாலு மகேந்திரா எழுதி, தயாரித்து, இயக்கிய இத்திரைப்படத்தில் சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா, ஓவியர் வீர சந்தானம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்கள். 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற 37ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் இத்திரைப்படம் சிறந்த குடும்பப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
Remove ads
திரைக்கதை
80 வயது முதியவரான சொக்கலிங்கம், தன் மனைவியின் மறைவுக்குப் பின், தான் வாழ்ந்த கிராமத்தை விட்டு நீங்கி சென்னையில் தன் அண்ணன் மகனான வாசுவின் வீட்டில் தங்குவதற்கு வருகிறார். வாசு தன் குடும்பத்துடன் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்கிறான். அவனால் தன் குடும்பத்தின் தேவைகளையே நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் சொக்கலிங்கத்தை ஒரு மேலதிக பாரமாக அவன் உணருகிறான். அவனது மனைவி சொக்கலிங்கம் மீது பாசமும் அனுதாபமும் கொண்டிருந்தாலும், குடும்ப நிலை காரணமாக பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவர்கள் படும் கஷ்டம் காரணமாகச் சொக்கலிங்கம் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்து கொள்கிறார். ஆயினும் பாசம் விடவில்லை. குடும்ப பாசம் எப்படி எப்படி வெளியாகிறது என்பதைச் சொல்வதே மீதிக் கதையாகும்.
Remove ads
நடிகர்கள்
நடிகர் பட்டியல் திரைப்படத் தலைப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
- கே. ஏ. சொக்கலிங்க பாகவதர் - சொக்கலிங்கம்
- அர்ச்சனா - வாசுவின் மனைவி
- ஓவியர் வீரசந்தானம் - வாசு
- பேபி ராஜலட்சுமி - வாசுவின் குழந்தை
- சீதா பாட்டி
- சூரியகாந்தம்மா
- தாதாஜி
- பிரணயமூர்த்தி
- சக்திவேல்
- ஆட்டோ ராஜா
- ரவி
- டால்ரிக்ஸ்
- மீனாகுமாரி
- ரேவதி
- நிர்மலா
- குமாரி
கருப்பொருள்
திரைப்படத்தின் மையக் கரு முதுமையின் அனுபவங்களைச் சுற்றி அமைந்துள்ளது[1]
தயாரிப்பு விபரம்
திரைப்படம் மிகக் குறைந்த செலவுடன் தயாரிக்கப்பட்டது. தனது முந்தைய திரைப்படங்கள் போல பாலு மகேந்திராவே வசனம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என பல துறைகளையும் கையாண்டார். ராமசாமி கலை அம்சத்தையும், வி. எஸ். மூர்த்தி, ஏ. எஸ். லட்சுமிநாராயணன் ஆகியோர் ஒலிப்பதிவையும் மேற்கொண்டார்கள்.[2] இத் திரைப்படத்தில் பாடல்கள் இடம் பெறவில்லை. பின்னணி இசையை எல். வைத்தியநாதன் அமைத்தார்.
வரவேற்பு
சந்தியா ராகம் இதுவரை எந்தத் திரையரங்கிலும் வெளியிடப்படவில்லை. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.[3] 1990 ஆம் ஆண்டு சிறந்த குடும்பச் சித்திரத்துக்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.[2] ஒரு வருடம் கழித்து இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.[4] 2007 ஆம் ஆண்டு தி இந்து நாளிதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில், வீடு, சந்தியா ராகம் இரண்டு திரைப்படங்களுமே தான் அதிகம் தவறு செய்யாத, குறைந்த விட்டுக்கொடுப்புகளுடன் கூடிய திரைப்படங்கள் என பாலு மகேந்திரா குறிப்பிட்டுள்ளார்.[5]
இந்தத் திரைப்படத்தின் மூலப் பிரதி (நெகடிவ்) இப்போது இல்லை என 2011 ஆம் ஆண்டில் பாலு மகேந்திரா கூறினார்.[6][7]
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads