சந்திரமதி
இந்திய இருமொழி எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரிகா பாலன் (Chandrika Balan) (பிறப்பு : 1954 சனவரி 17) புனைகதை மற்றும் மொழி பெயர்ப்பாளருமான இவர் ஓர் இந்திய இருமொழி எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் சந்திரமதி என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறார்.[1] மேலும் ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் விமர்சகரும் ஆவார் .[2] சந்திரமதி ஆங்கிலத்தில் நான்கு புத்தகங்களையும், மலையாளத்தில் 20 புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். இதில் ஒரு புதினம், இடைக்கால மலையாளக் கவிதைகளின் தொகுப்பு, இரண்டு கட்டுரைகளின் தொகுப்புகள், இரண்டு நினைவுக் குறிப்புகள் மற்றும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஐந்து புத்தகங்கள் உட்பட 12 சிறுகதைத் தொகுப்புகள் உள்ளன.
Remove ads
கல்வி வாழ்க்கை
சந்திரமதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தார். 1976ஆம் ஆண்டில் கேரள பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1988ஆம் ஆண்டில் கேரள பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் அனைத்து புனிதர்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கிய பேராசிரியராவும் இருந்தார்.[3] 1993 முதல் 1994 வரை மெடிவல் இன்டியன் லிட்ரேட்சர் என்ற இதழில் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார்.[1]
இவரது கல்வி வாழ்க்கையை அங்கீகரிக்கும் விதமாக 1999 ஆம் ஆண்டில் மிகச் சிறந்த ஆசிரியருக்கான பேராசிரியர் சிவபிரசாத் அறக்கட்டளை விருதையும் [4] 2002 [5] கேரளாவில் செயின்ட் பெர்ச்மன்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சிறந்த கல்லூரி ஆசிரியருக்கான விருதினையும் பெற்றார்.[5] 1998 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமியின் கலாச்சார பரிமாற்ற திட்டத்தின் கீழ் 10 இந்திய எழுத்தாளர்கள் குழுவுடன் சுவீடனுக்கு சென்றார். இந்தப் பயணம் இவருக்கு "ரெய்ண்டீர்" என்ற சிறுகதையை எழுத ஊக்கமளித்தது.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads