சந்திரவாசி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரவாசி (cendrawasih) என இந்தோனேசியாவிலும் பப்புவா நியூகினியிலும் அழைக்கப்படுகின்றனவும் சொர்க்கப் பறவை என்ற பொருளில் ஆங்கிலத்தில் (birds-of-paradise) அழைக்கப்படுவதனவுமான பறவையினங்கள் பசரீன்கள் வரிசையிலுள்ள "சந்திரவாசி" குடும்ப பறவையாகும். இவற்றின் பெரும்பான்மை நியூ கினி மற்றும் அதன் சூழலும், சிறிய அளவில் மலுக்கு தீவுகள் மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்குடும்பத்தைச் சேர்ந்த 14 வகைகளில் நாற்பத்தியொரு இனங்கள் காணப்படுகின்றன.[1] இப்பறவைகள் அவற்றின் பால் ஈருருமை இனத்தின் ஆண் பறவைகளின் இறகு அமைப்பு, மிகவும் நீண்ட மற்றும் அலகு, செட்டை, வால் அல்லது தலை ஆகிய இடங்களிலிருக்கும் விரிவான இறகுகள் அமைப்பு ஆகியவற்றால் சிறப்பாக அறியப்பட்டவை. இவற்றில் பல மழைக்காடுகளை வசிப்பிடமாகக் கொண்டவை. இவற்றின் எல்லா இனங்களும் பழங்களை உணவாகவும், சிறியளவானவை கணுக்காலிகளையும் உண்ணும். சந்திரவாசிகள் பல வகையான இனப்பெருக்க முறைகளாக ஒருதுணை மணம் முதல் போட்டி வகை பலதுணை மணம் வரை கொண்டுள்ளன.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads