சந்திர மோகன் ராய்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திர மோகன் ராய் (Chandra Mohan Rai) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சி தலைவரான இவர் அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1] ராய் 1967ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலில் ஜனசங்கம் சார்பில் போட்டியிட்டார். பின்னர் 1977ஆம் ஆண்டில் ராம்நகர் சட்டமன்றத் தொகுதியில் ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு அர்ஜுன் விக்ரம் சாவிடம் தோல்வியடைந்தார். ராய் 1990-இல் பாஜக சார்பில் போட்டியிட்டு ராம்நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2000 மற்றும் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் ராம் நகர் தொகுதியிலிருந்தும் 2010ஆம் ஆண்டு சன்படியா சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான முதல் மற்றும் இரண்டாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் ராய் அமைச்சராகப் பணியாற்றிய பின்னர் 2015 முதல் தீவிர அரசியலிலிருந்து விலகினார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads