சந்தேக நபர் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

சந்தேக நபர் (திரைப்படம்)
Remove ads

சந்தேக நபர் (Suspect X) என்பது 2008ஆம் ஆண்டு வெளிவந்த ஜப்பானிய மொழி திரைப்படம் ஆகும். இதன் இயக்குநர் ஹரொஜி நிசிடனி (Hiroshi Nishitani) என்பவர் ஆவார். இத்திரைப்படத்தின் கதை ஜப்பனிய எழுத்தாளர் கெய்கோ கிகாஷினோ என்பவரின் த டிவோஷன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற புதினத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் சந்தேக நபர், இயக்கம் ...
Remove ads

கதை

கணித ஆசிரியரான டெட்ஷியா இஷிகாமி சமூகத்துடன் சேராமல் வாழும் மனிதர், விவாகரத்து பெற்று தனியாக ஒரு மகளை வைத்துக்கொண்டு உணவு விடுதி நடத்தி வரும் யாசுகோ ஹனவோகா ஆகியோரின் காதல் கதையை மென்மையாக சொல்லப்பட்டுள்ளதுவே, இந்தப் படத்தின் கதை. தனது காதலியின் முன்னால் கணவனின் தொல்லை தாங்க முடியாமல் காதலியும் மகளும் சேர்ந்து கொலைசெய்வதை பார்த்துவிட்ட கணித ஆசிரியர் தனது கணிதத்தின் மூலமே காப்பாற்ற நினைக்கிறார். திரைப்படத்தில் காதலனும் காதலியும் பனிபொழியும் மலை மீது ஏறிச்செல்லும் காட்சி அழகாக படமாக்கப்பட்டு, கதையின் செறிவை தெளிவுபடுத்துகிறது.

Remove ads

வரவேற்பு

2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் 52,323,944 டாலர்கள் வசூலித்து சாதனை புரிந்தது.[2]

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads