சந்தௌலி மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சந்தௌலி மாவட்டம்map
Remove ads

சந்தௌலி மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சந்தௌலி நகரத்தில் உள்ளது. இந்த மாவட்டம், வாரணாசி கோட்டத்திற்கு உட்பட்டது. வாரணாசி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சந்தௌலி மாவட்டமாக நிர்வகித்தனர். சில காலத்திற்குப் பின்னர், மீண்டும் வாரணாசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் சந்தௌலி மாவட்டம் தனியாக நிர்வகிக்கப்படுகிறது. நெல்லும் கோதுமையும் விளைவிக்கின்றனர்.இம்மாவட்டம் சந்தௌலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Remove ads

புவிப்பரப்பு

இது சந்தௌலி, சகல்தீகா, சாக்கியா என்ற மூன்று வட்டங்களைக் கொண்டது. இங்கு கங்கை, கர்மனசா, சந்திரபிரபா உள்ளிட்ட ஆறுகள் பாய்கின்றன.

பொருளாதாரம்

இது இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டம் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியை பெறுகிறது.[1]

மக்கள் தொகை

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,952,713 பேர் வாழ்கின்றனர்.[2] சதுர கிலோமீட்டருக்கு 768 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[2] ஆயிரம் ஆண்களுக்கு 913 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[2] இங்குள்ளோரில் 73.86% கல்வி கற்றோர் ஆவர்.[2]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads