சப்போரியா நகரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சப்போரியா (Zaporizhia) என்பது தென்-மத்திய உக்ரைனில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது தினேப்பர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சப்போரியா மாகாணத்தின் நிர்வாக மையமாகும்.[1] அதன் கோர்த்திசியா தீவு மற்றும் நீப்பர் நீர் மின் நிலையத்திற்கு பெயர் பெற்றது . இது எஃகு, அலுமினியம், விமான இயந்திரங்கள், தானியங்கித் துறை, துணை மின்நிலையங்களுக்கான மின்மாற்றிகள் மற்றும் பிற கனரக தொழில்துறை பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு முக்கியமான தொழில்துறை மையமாகும்.

Remove ads

நிலவியல்

இந்த நகரம் தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ளது. தினேப்பர் ஆறு நகரத்தை இரண்டு பகுதிகளாக கோர்த்திசியா தீவுகளுக்கிடையில் பிரிக்கிறது . நகரம் 334 கி.மீ பரப்பளாவைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 50 மீ உயரத்தில் அமைந்துள்ளது.[2] கோர்த்திசியா தீவைச் சுற்றியுள்ள இரண்டு நீரோடைகள் புதிய மற்றும் பழைய தினேப்பர் என்று அழைக்கப்படுகின்றன. புதிய தினேப்பர் சுமார் 800 மீ (2600 அடி) அகலமும், பழைய தினேப்பர் சுமார் 200 மீ (650 அடி) அகலமும் கொண்டது. தீவு 24 கி.மீ பரப்பளாவைக் கொண்டுள்ளாது. நகரத்தில் பல சிறிய ஆறுகளும் உள்ளன, அவை தினேப்பர் ஆற்றில் கலக்கின்றன .

கோர்த்திசியா தீவின் தாவரங்கள் உலர்ந்த புல்வெளி காற்று மற்றும் ஒரு பெரிய நன்னீர் ஆற்று படுகை காரணமாக தனித்துவமானது மற்றும் வேறுபட்டவை, இது காசு மாசுபடுவதை சுத்தம் செய்கிறது. கோர்த்திசியா தீவு ஒரு தேசிய பூங்காவாகும். தீவின் மேற்பரப்பு பெரிய பள்ளத்தாக்குகள், நடக்கும் வழிகள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்களால் சூழப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் இந்த தீவு மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு பகுதியாகும். ஓய்வு விடுதிகள் மற்றும் சுகாதார நிலையங்கள் ஏராளமான அளவில் இங்கு அமைந்துள்ளது. நீச்சல் மற்றும் பிற நீர் நடவடிக்கைகளுக்கான வசதியான மணல் கடற்கரைகளும் இங்கே உள்ளன: RU [3]

Remove ads

நிர்வாகம்

சப்போரியா ஒரு பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது. நகரம் 7 நிர்வாக பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

புள்ளி விவரங்கள்

நகர மக்கள் தொகை

மாநிலம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து நகர மக்கள் நிரந்தரமாக குறைந்து வருகின்றனர். 2014-2015 ஆம் ஆண்டில் மக்கள் தொகை குறைவு விகிதம் வருடத்திற்கு -0.56% ஆகும்.[4] ஜனவரி 2017 இல், நகர மக்கள் தொகை 750,685 மக்களை சமப்படுத்தியது.[5] மாநில சுதந்திரத்தின் போது நகரத்தின் மொத்த மக்கள் தொகை குறைப்பு சுமார் 146 ஆயிரம் பேர் என்ற அளவில் உள்ளது.

இன அமைப்பு

சப்போரியா நகரத்தின் குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் உருசிய மொழியில் பேசுகிறார்கள், ஆனால் புற நகரங்கள் மற்றும் கிராமங்களில் உக்ரேனிய மொழி ஆதிக்கம் செலுத்துகிறது. [6] [not in citation given] உத்தியோகபூர்வ அரசாங்க வணிகத்திற்காக உக்ரேனிய மொழி பயன்படுத்தப்படுகிறது.

மதம்

குடிமக்களில் பெரும்பாலோர் உக்ரேனிய மரபுவழி திருச்சபையின் (மாஸ்கோ பேட்ரியார்ச்சேட்) மரபுவழி கிறிஸ்தவர்கள் அல்லது உக்ரைனின் புதிதாக உருவாக்கப்பட்ட மரபுவழி தேவாலயத்தை பின்பற்றுபவர்கள் ஆவர் . மரபுவழி தேவாலயங்களில் மாஸ்கோ பேட்ரியாசேட்டின் கீழ் உள்ள மெர்செசன் தேவாலயம் மிகவும் பிரபலமானது. நகரில் புனித நிக்கோலசு தேவாலயம் மற்றும் புனித ஆண்ட்ரூ தேவாலயம் ஆகியவை உள்ளன. சப்போரியா மாவட்டத்தில் உக்ரைன் முஸ்லிம்களின் ஆன்மீக நிர்வாகத்தின் ஒரு பகுதியாக ஐந்து சமூகங்கள் மற்றும் நான்கு சுயாதீன இசுலாமிய சமூகங்கள் உள்ளன. இந்து மதம் வேத அகாதமியின் ஒரு கிளை இந்த நகரம் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

சப்போரியா உக்ரைனின் ஒரு முக்கியமான தொழில்துறை மையமாகும், இது நாட்டின் முக்கிய வாகன உற்பத்தி நிறுவனமான மோட்டார்-சிச் உலக புகழ்பெற்ற விமான இயந்திர இயந்திர உற்பத்தியாளர். உக்ரேனின் முன்னணி தொழில்துறை வளாகங்களில் ஒன்றான டோனெட்ஸ் பேசின், நிகோபோல் மாங்கனீசு மற்றும் கிரிவி ரி இரும்பு சுரங்கங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சப்போரியா, உக்ரைனின் நான்காவது பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமாகும். உலகின் 54 வது இடத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.

Remove ads

கலாச்சாரம்

சப்போரியாவில் ஒரு சேர்ந்திசைக் குழு, சில அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள், நூலகங்கள் உள்ளன .

2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு

2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது இந்நகரத்தின் இருந்த அணு உலை வளாகம் 4 மார்ச் 2022 அன்று உருசியா படையின் குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியது.[7]

இதனையும் காண்க

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads