சமணக் காஞ்சி

From Wikipedia, the free encyclopedia

சமணக் காஞ்சி
Remove ads

சமணக் காஞ்சி அல்லது திருப்பருத்திக்குன்றம், காஞ்சிபுரத்திற்கு தெற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் [1] பாயும் வேகவதி ஆற்றின் கரையில் அமைந்த திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் உள்ளது.[2] பருத்திக் காடுகள் நிறைந்து இருந்ததால் இதனை திருப்பருத்திக்குன்றம் என்றும் அழைப்பர். இவ்விடம் பல்லவர் காலத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தது.[3]

Thumb
திருப்பருத்திக் குன்றம், கோயில் விமானம், காஞ்சிபுரம்
Thumb
சமணக் காஞ்சிக் கோயில் ஓவியம்

சமணக் காஞ்சியில் இரண்டு கோயில்கள் உள்ளது. அதில் ஒன்று பல்லவர் காலத்துக் கோயில் ஆகும். மற்றொன்று பல்லவர் காலத்திற்குப் பின்னர் கட்டப்பட்டது.

சமணக் காஞ்சியில் சமண மடம் ஒன்று இயங்கி வந்ததாக வரலாற்றுக் குறிப்பின் வாயிலாக அறியமுடிகிறது. காஞ்சிபுரத்திற்கு, பொ.ஊ. 640-ல் சீன பௌத்த யாத்ரீகர் யுவான் சுவாங் இங்கு விஜயம் செய்ததாகவும், அச்சமயம் காஞ்சி மாநகரில் எண்பத்து மூன்று சமணக் கோயில்களைக் கண்டு சென்றதாகவும் தன் பயணக்குறிப்பில் குறித்துள்ளார்.

Remove ads

சமணக் கோயில்கள்

சமணக் காஞ்சியில் எட்டாவது மற்றும் 24வது தீர்த்தங்கரர்களின் இரண்டு கோயில்கள் உள்ளது.[4]

சந்திரபிரபா கோயில்

சமணக் காஞ்சியில் சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரப்பிரபருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மேடான இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளதால் இக்கோயிலை ஏர்வாஸ்தலம் என்றும் மலையனார் கோயில் என்றும் அழைக்கப்பட்டதாக இத்தல வரலாறு ஆய்வுநூல் எழுதிய அறிஞர் டி. என். இராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இக்கோயில் பல்லவப் பேரரசர் இரண்டாம் நரசிம்ம பல்லவன் உருவாகியிருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

வர்த்தமானர் கோயில்

24வது தீர்த்தங்கரான மகாவீரர் எனும் வர்த்தமானர் மூலவராக உயர்ந்த பீடத்தின் மீது, தேவர்கள் கவரி வீச, முக்குடை கவிப்ப, ஆழ்ந்த தவக்கோலத்தில் காட்சி தருகிறார். இவரை திரிலோகநாதர் என்று அழைப்பர்.

வர்த்தமானர் கோயிலில் மகாவீரர், புஷ்தந்தர், தருமநாதர் பத்மபிரபா, வசுபூஜ்ஜியர், பார்சுவநாதர், ரிசபநாதர், பிரம்மதேவர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளது. இக்கோயிலில் அர்த்தமண்டபம், முக்கிய மண்டபம், சங்கீத மண்டபம், சாந்தி மண்டபம், வலம் வரும் பாதை, கோயில் கிணறு, சுற்றுச் சுவர்கள் எனச் சிறப்பான உள்கட்டமைப்புகளுடன் முழுமையாகப் பல்லவர்களின் கட்டடக்கலையில் வெளிப்படுகிறது.

ஆறாவது தீர்த்தங்கரரான பத்மபிரபா, 12-வது தீர்த்தங்கரரான வசுபூஜ்ஜியர், 23-வது தீர்த்தங்கரரான பார்சுவநாதர் ஆகிய மூவருக்கான கோயில்கள் முதலாம் காலத்தில் கட்டப்பட்டவைகளாக குராமரம் இத்தலத்தின் இக்கோயிலின் தலவிருட்சம் ஆகும்.[5]

Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads