சமத்துவ சிலை (இராமானுஜர்)

தெலங்கானாவின், ஐதராபாத் நகரில் இராமானுசருக்கு அமைக்கப்பட்டுள்ள பிருமாண்ட சிலை From Wikipedia, the free encyclopedia

சமத்துவ சிலை (இராமானுஜர்)map
Remove ads

சமத்துவச் சிலை (Statue of Equality) என்பது வைணவ ஆச்சாரியார் இராமானுஜரின் சமத்துவக் கொள்கையைப் போற்றும்படியாகவும், அவரது ஆயிரமாண்டு பிறந்தநாள் நினைவாகவும் 216அடி உயரத்தில் தெலங்காணா மாநில தலைநகரான ஐதராபாத்தில் நிறுவப்பட்ட சிலையாகும்.

விரைவான உண்மைகள் ஆள்கூறுகள், இடம் ...
Remove ads

விளக்கம்

சமத்துவச் சிலை (Statue of Equality) இந்தியாவின் தமிழ்நாட்டில் 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆச்சாரியார் இராமானுஜரின் சமத்துவக் கொள்கையைப் போற்றும்படியாகவும், இவரது ஆயிரமாண்டு பிறந்தநாள் நினைவாகவும் 216அடி உயரமுள்ள இச்சிலை 2019-இல் தெலங்காணா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் நகரத்தில் சின்ன ஜீயரால் நிறுவப்பட்டது.[3] இச்சிலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 5 பிப்ரவரி 2022 அன்று திறந்து வைத்தார்.[4][5][6] 216 அடி உயரம் கொண்ட இராமானுஜர் சிலை, விரிந்த தாமரை வடிவ 54 அடி உயர பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.

தியான நிலையில் அமர்ந்திருக்கும் பஞ்சலோக இராமானுஜர் சிலை 120 கிலோ கிராம் தங்கத்தால் மேற்பூச்சு பூசப்பட்டுள்ளது. இது இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்ததை என்பதை நினைவு கூறுகிறது.[7]

Remove ads

இராமானுஜர் கோயில்

34 ஏக்கர் பரப்பில் அமைந்த இராமானுஜர் கோயிலின் தரை தளத்தில், 63,444 சதுர அடிப்பரப்பில் இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றையும், தத்துவங்களை விளக்கும் சிற்பங்களும், சித்திரங்களும் கொண்டது. 30,000 சதுர அடி கொண்ட இரண்டாம் தளத்தில், இராமானுஜரின் 120 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் மூன்றாம் தளத்தில் 14,700 சது அடியில் வேத சாத்திரங்களின் மின் நூலகம் மற்றும் ஆய்வு மையம் உள்ளது.[6][8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads