சமந்தா இரத்தினம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமந்தா இரத்தினம் (Samantha Ratnam, சமந்தா ரட்ணம், பிறப்பு: 1977) ஆத்திரேலிய சமூக சேவையாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் ஆத்திரேலியா, விக்டோரியா மாநில பசுமைக் கட்சியின் தலைவரும் ஆவார். இவர் விக்டோரியா சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மோர்லாந்து நகரசபை முதல்வரும் ஆவார்.[1]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
இங்கிலாந்தில் இலங்கைத் தமிழ் பெற்றோருக்கு இரட்டைக் குழந்தைகளில் ஒருவராக 1977 ஆம் ஆண்டில் பிறந்த சமந்தா இலங்கையில் வளர்ந்தார்.[2] சமந்தாவின் குடும்பத்தினர் 1983 கறுப்பு யூலை இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு ஐரோப்பா, மற்றும் கனடா சென்று, இறுதியாக ஆத்திரேலியாவில் குடிபுகுந்தனர்.[3] இவரது பெற்றோர் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த மேதர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
சமந்தா மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலைப் பட்டத்தையும், பின்னர் சமூக சேவையில் இளங்கலை சிறப்புப் பட்டத்தையும் பெற்றார். 2015 ஆம் ஆண்டில் அதே பல்கலைக்கழகத்தில் இளைஞர் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
சமந்தா ரட்ணம் அகதிகள் நலத்திட்டங்களுக்காக பல்வேறு அமைப்புகளில் பணிபுரிந்துள்ளார்.[3]
Remove ads
மோர்லாந்து நகரசபை
2012 ஆம் ஆண்டில் மோர்லாந்து நகரசபைக்கான தேர்தலில் சமந்தா பசுமைக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] 2016 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் 55% வாக்குகளைப் பெற்று மீண்டும் தெரிவானார்.[4]
2016 ஆம் ஆண்டில் மோர்லாந்து நகரசபைத் தலைவராக நகரசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][5][6][7]
பழங்குடிகளை அவமதிக்கும் வகையில் சனவரி 26 ஆத்திரேலியா நாளில் குடியுரிமை வழங்கும் நிகழ்வுகளை நகரசபைகள் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, அதற்கு ஆதரவாக சமந்தா தனது மோர்லாந்து நகரசபையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.[8] 2017 அக்டோபர் 11 இல் தனது நகரசபைப் பதவியைத் துறந்தார்.[9]
Remove ads
2016 நடுவண் தேர்தல்
2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆத்திரேலிய நடுவண் தேர்தலில் பசுமைக் கட்சியின் சார்பாக வில்சு தேர்தல் தொகுதியில் சமந்தா போட்டியிட்டார்.[10] வில்சு தொகுதியில் பசுமைக் கட்சிக்கு 10% அதிக வாக்குகள் கிடைத்திருந்தாலும், தொழிற் கட்சியைச் சேர்ந்த பீட்டர் காலில் 4.88 % அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றார்.[11][12]
விக்டோரிய மாநில அரசியல்
ஆத்திரேலிய விக்டோரியா மாநில பசுமைக் கட்சியின் தலைவர் கெர்க் பார்பர் அரசியலில் இருந்து இளைப்பாறுவதாக அறிவித்ததை அடுத்து, சமந்தா ரட்ணம் அக்கட்சியின் தலைவராக 2017 அக்டோபர் 12 அன்று அறிவிக்கப்பட்டார். விக்டோரியா மாநில சட்டமன்றத்தில் கிரெக் பார்பரின் இடத்திற்கு சமந்தா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13][14][15]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads