ஆஸ்திரேலியா நாள்

From Wikipedia, the free encyclopedia

ஆஸ்திரேலியா நாள்
Remove ads

ஆஸ்திரேலியா நாள் (Australia Day), என்பது ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளன்று ஆஸ்திரேலியா முழுவதும் தேசிய ரீதியாகக் கொண்டாடப்படும் நிகழ்வாகும். இது ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக பிரித்தானியக் குடியேறிகள் வந்திறங்கிய நாளை நினைவு கூரும் முகமாக கொண்டாடப்படுகிறது. 1788 இல் இந்நாளில் நியூ சவுத் வேல்ஸ், ஜாக்சன் துறையில் ஆளுநர் ஆர்தர் பிலிப் என்பவரால் முதலாவது குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா நாள் நாடு முழுவதும் ஒரு பொது விடுமுறை நாளாகும்.

விரைவான உண்மைகள் ஆஸ்திரேலியா நாள் Australia Day, பிற பெயர்(கள்) ...
Thumb
Australia Day Picnic, Brisbane, 1908

முதலாவது ஆஸ்திரேலியா நாள் 1808 ஆம் ஆண்டில் கொண்டாடப்படட்து. அப்போது ஆளுநராக இருந்த லக்லான் மக்குவாரி இவ்விழாவை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்[1]. 2004 ஆண்டில், கிட்டத்தட்ட 7.5 மில்லியன் மக்கள் நாடெங்கும் நிகழ்ந்த வைபவங்களில் கலந்து கொண்டனர்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads