சமயக்குரவர்
நால்வர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமயக்குரவர் என்பவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். இவர்களை நால்வர் என்றும் நால்வர் பெருமக்கள் சைவ சமயத்தினர் அழைக்கின்றனர்.[1]

சமயக்குரவர் நால்வரின் காலம், செயல்பாடுகள், சைவ நூல்களில் அவர்களுடைய தாக்கங்கள் என பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் எழுதப்படுகின்றன. செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுக்கொண்டும் நூலில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் எந்தக் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென அறிந்து கொள்கின்றனர்.[2] இந்து ஆய்வுகள் சைவ சமயத்தின் வரலாறுகள் குறித்த ஐயப்பாடுகளை களையவும், சம்பவங்களுக்கு வலுவூட்டவும் உதவுகின்றன.
Remove ads
சமயக்குரவர்கள் பற்றி வெளிவந்துள்ள நூல்கள்

- நால்வர் நான்மணிமாலை — திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் சமயப் பணி பற்றிக் கூறும் நூலாக சிவப்பிரகாசர் எழுதியது.
- நால்வர் நெறி — 1968ஆம் ஆண்டு க. பாலசுப்பிரமணியம், வ. இ. இராமநாதன் அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும்.[3]
கோயில்களில்

சிவாலயங்களின் பிரகாரத்தில் நால்வருக்கும் சிலைகளும், தனிச்சன்னதிகளும் அமைக்கப்படுகின்றன. பொதுவாக இடமிருந்து வலமாக ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த வரிசையை மாற்றுவதில்லை.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads