பெருங்கடல்

From Wikipedia, the free encyclopedia

பெருங்கடல்
Remove ads

பெருங்கடல் (ocean) என்பது முக்கியமான உப்பு நீர் நிலை ஆகும். இது நீர்க் கோளத்தின் முக்கியமான கூறும் ஆகும். ஏறத்தாழ 71% புவி மேற்பரப்பு (361 மில்லியன் சதுர கிலோமீட்டர்) தொடர்ச்சியாக அமைந்துள்ள பெருங்கடல்களினால் மூடப்பட்டுள்ளது. இது பல பெருங்கடல்களாகவும், பல சிறிய கடல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% மற்றும் பூமியின் உயிர்க்கோளத்தில் 90% அடங்கியது கடல் ஆகும்.[1] புவியில் உள்ள நீரில் 97% கடலில் உள்ளது, மேலும் கடல்சார் அறிஞர்கள் உலக சமுத்திரத்தில் 5% க்கும் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.[1] புவியின் கடலானது ஏறக்குறைய 3,700 மீட்டர் (12,100 அடி) சராசரி ஆழத்துடன்,[2][3][4] 1.35 பில்லியன் கனசதுர கிலோமீட்டர் (320 மில்லியன் க்யூ) நீரைக் கொண்டது ஆகும். இதன் பரப்பளவின் அரைப் பகுதிக்கு மேல் 3,000 மீட்டருக்கு (9,800 அடி) மேற்பட்ட ஆழம் கொண்டது. சராசரி உப்புத்தன்மை ஆயிரத்தில் 35 பகுதி (35%) ஆகும். பொதுவாக முழுக் கடல்நீரும் சராசரியாக ஆயிரத்துக்கு 30 - 38 பகுதிகள் உப்புத்தன்மை கொண்டது.

Thumb
இயங்குபட வடிவில் உலகின் பெருங்கடல்களைக் காட்டும் நிலப்படம்.
Thumb
ஐந்து பெருங்கடல்களின் காட்சி

பூமியின் உயிர்கோலத்தில் உலகப் பெருங்கடல்கள் முக்கிய அங்கமாக இருப்பதால், இது அனைத்து காலங்களிலிலும், கார்பன் சுழற்சியின் பகுதிகள், காலநிலை மற்றும் வானிலை போன்றை பாதிக்கிறது. உலக சமுத்திரத்தில் 230,000 அறியப்பட்ட உயிர் இனங்கள் உள்ளன, ஆனால் பெரும்பாலானவற்றை கண்டுபிடிக்க முடியாததால், இருபது மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் உள்ளதாக கருதப்படுகிறது.[5] பூமியின் பெருங்கடலின் தோற்றம் குறித்து தெரியவில்லை; ஹேடான் காலத்தில் உருவாகிய சமுத்திரங்கள், உயிரின் வெளிப்பாட்டிற்கு உந்துதலாக இருந்திருக்கலாம்.

சூரிய மண்டலத்தில் மற்ற இடங்களில் சமுத்திரங்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன இருப்பினும், புவிக்கு வெளியே உறுதிப்படுத்தப்பட்ட ஒரே நீர்மக் கடல் சனி கோளின் துணைக்கோளான டைட்டனில் உள்ள பெரிய டைட்டானின் ஏரிகள் ஆகும். புவியியல் வரலாறுகளின்படி துவக்கத்தில், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை பெரிய நீர் சமுத்திரங்களைக் கொண்டிருந்ததாக கோட்பாட்டு உள்ளது. செவ்வாயில் கடல் குறித்த கருதுகோள் செவ்வாயின் மேற்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி தண்ணீரால் மூடப்பட்டிருந்ததாக கூறுகிறது, வெள்ளி கிரகத்தில் ஏற்பட்ட பசுமைக்குட்டில் விளைவால் அங்கிருந்த கடல் ஆவியாகி சென்றிருக்கலாம் என்கின்றனர். பல குள்ள கிரகங்கள் மற்றும் துணைக்கோல்களின் மேற்பரப்பில் உறுதிபடுத்தப்படாத சமுத்திரங்கள் இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றன; குறிப்பிடத்தக்க வகையில், வியாழன் கோளின் துணைக்கோளான ஐரோப்பாவின் கடல் பூமியின் நீரின் அளவைவிட இரு மடங்கு அதிகமாகக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள பெரிய கிரகங்களில் திரவ வளிமண்டல அடுக்குகள் இன்றும் இருக்கலாம் என உறுதிப்படுத்த கூறுகளைக் கொண்டிருக்கின்றன. பெருங்கடல் கிரகங்கள் என்பது ஒரு கருதுகோள் வகையாகும், இந்த கிரகங்களின் மேற்பரப்பு முழுவதும் திரவத்தால் மூடப்பட்டிருக்கும்.[6][7]

Remove ads

சொற்பிறப்பு

ஆங்கிலத்தில் பெருங்கடலுக்கு வழங்கப்படும் சொல்லான «ஓஷன்» என்னும் சொல் செவ்வியல் கால பழஞ்சொல்லாகும், ஒசியஸ் (/ oʊsiːənəs /; கிரேக்கம்: Ὠκεανός Ōkeanós,[8] உச்சரிக்கப்படுகிறது [ɔːkeanós]), கிரேக்க செவ்வியல் புராணங்களின்படி டைட்டனின் அண்ணனாவார், இவர் உலகத்தை சுற்றிவளைத்த மகத்தான ஆற்றின் ஆளுருவாக, பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமர நாகரிக மக்களால் கடல் குறித்த தெய்வீகமாக நம்பிக்கையாக இருந்தது. ஒசியஸ் என்ற கருத்துவில் இந்திய-ஐரோப்பிய கருத்துருவில் தொடர்பு கொண்டது என அறிஞர்கள் கருதுகின்றனர்.[9]

Remove ads

புவியின் உலகளாவிய கடல்

கடல் பகுதிகள்

பொதுவாகப் புவி மேற்பரப்பிலுள்ள பெருங்கடல்கள் தனித்தனியானவை எனக் கொள்ளப்பட்டு வந்தாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள உப்பு நீருடன் கூடிய உலகப் பெருங்கடல் ஆகும். இவ்வாறு பெருங்கடல்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கட்டற்ற பரிமாற்றங்களைக் கொண்ட ஒரே உலகப் பெருங்கடல் அல்லது உலகக்கடல் என்றும் அழைக்கப்படுகிறது.[10][11] முதன்மையான பெருங்கடல் பிரிவுகள், ஒரு பகுதி கண்டங்களாலும், தீவுக் கூட்டங்களாலும், பிற கட்டளை விதிகளாலும் இறங்குவரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளன,  பல்வேறு தொல்பொருட்கள், மற்றும் பிற நிபந்தனைகளுடன்.[7][12][13]

மேலதிகத் தகவல்கள் #, பெருங்கடல் ...

ஆதாரங்கள்: புவிக் கலைக்களஞ்சியம்,[14][15][16][19][20] சர்வதேச ஹைட்ரோகிராபிக் ஆர்கனைசேஷன்,[21] பிராந்திய கடல்வழி: ஒரு அறிமுகம் (டாம்சாக், 2005),[17] என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா [18] சர்வதேச தொலைத்தொடர்பு கழகம்.[22]|style=line-height: 1.4em; margin: 1em 0 1.4em 1em; font-size: 0.9em;}}

பசிபிக், அத்திலாந்திக் பெருங்கடல்களை புவி மையக் கோட்டை வைத்து வடக்குத் தெற்குப் பகுதிகளாகப் பிரிப்பதும் உண்டு. பெருங்கடல்களின் சிறிய பகுதிகள் கடல்கள், வளைகுடாக்கள், விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றைவிட நிலத்தால் சூழப்பட்ட சில உப்புநீர் நிலைகளும் உள்ளன. ஆரல் கடல், பெரும் உப்புநீரேரி போன்றன இவற்றுட் சில. இவை கடல் என அழைக்கப்பட்டாலும் உண்மையில் இவை உப்புநீரேரிகளே.

Remove ads

மிகப்பெரிய பெருங்கடல்

Thumb
பசுபிக் பெருங்கடலின் வரைபடம்

உலகின் மிகப் பெரிய பெருங்கடல் பசுபிக் பெருங்கடலாகும். இது உலக பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியை தனது பரப்பளவாகக் கொண்டுள்ளது. பசுபிக் பெருங்கடலே உலகின் ஆழமான பெருங்கடலும் ஆகும். இது முப்பத்தாறாயிரத்து இருனூறு அடி ஆழம் கொண்டதாகும்.

Thumb
அட்லான்டிக் பெருங்கடல்

மிக சிறிய பெருங்கடல்

உலகின் மிகச்சிறிய பெருங்கடல் ஆர்டிக் பெருங்கடலாகும். இதை வடக்கு பெருங்கடல் என்றும் கூறுவர்.

Thumb
பச்சை மற்றும் நீல நிறத்தில் காட்சி அளிக்கும் பெருங்கடல்

பெருங்கடலின் நிறம்

பொதுவாக மக்கள் அனைவரும் தண்ணீர் நீல வானத்தை பிரதிபலிக்கிறது அதனால் நீல நிறமாக உள்ளது என்று கூறுகிறார்கள்.ஆனால் அது உண்மை இல்லை. கடலின் நீரின் அளவு மற்றும் ஆழத்தின் அளவை பொறுத்து நிறம் மாறுபடும்.பொதுவாக இந்த நிறமாற்றங்களை பெருங்கடல்களில் காணலாம். பெரும்பாலும் பெருங்கடல் பச்சை மற்றும் நீல நிறத்தில் காணப்படும்.இந்த நிற வேறு பாட்டிற்கு காரணம் கடல் நீர் சூரிய ஒளியில் உள்ள சிவப்பு நிறத்தை உறிஞ்சி நீல மற்றும் பச்சை வண்ணங்களை உமிழ்கின்றது.

Remove ads

உயிரியல்

உயிரினங்களின் வாழ்வில் கடல் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. கடல் நீராவி, நீர் சுழற்சியின் ஒரு கட்டமாகவும், மழையின் முதன்மை ஆதாரமாகவும், உள்ளது மேலும் கடலின் வெப்பநிலையானது நிலத்தில் வாழும் உயிர்களின் வாழ்க்கையை பாதிக்கும் காலநிலை மற்றும் காற்றின் வடிவங்களையும் தீர்மானிக்கின்றது. கடலுக்குள் உயிர் வாழ்க்கையானது 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானது. கடற்கரையிலிருந்து ஆழம் மற்றும் தூரம் இரண்டும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற பல்லுயிரிகளை வலுவாக பாதிக்கின்றன.[23]

கடல்களில் வாழும் உயிரினங்கள் உப்பு நீரிலும் வாழ முடியும். பல்வேறு கடல் உயிரினங்கள் ஆழமற்ற நீர், மற்றும் ஆழமான கடல் பகுதியில் வாழ்கின்றனர். கிட்டத்தட்ட கடலில் அனைத்து விலங்குகளும் நேரடியாக அல்லது மறைமுகமாக தங்கியுள்ளது. ஆழமற்ற நீரில் கடல் நண்டுகள் காணலாம்.டால்பின்கள், திமிங்கலங்கள் போன்றவை பெருங்கடலில் அதிகமாக காணப்படுகின்றன.மற்றும் பல வகை பாலூட்டிகளும் பெருங்கடல் உயிரினங்களில் அடங்கும்.

Remove ads

பெருங்கடலின் சூழல்

கடலை போலவே பெருங்கடலின் சூழலும் இருக்கும்.பெருங்கடலில் ஏராளமான எரிமலைகள் இருக்கும். மேலும், எவரெசுட்டு சிகரங்களை காட்டிலும் மிகப்பெரிய சிகரங்கள் பெருங்கடலில் இருக்கும். மேலும் பவளப்பாறைகள், தாதுக்களும் பெருங்கடளில் புதைந்து உள்ளன.

பெருங் கடலில் உப்பு

பெருங்கடல்கள் உப்பு நீரைக் கொண்டுள்ளது. உப்புக் கனிமங்கள் நிலத்திலிருந்து ஆறுகள் வழியாக கடலில் கலப்பதால், கடல்நீர் உப்புத் தன்மைக் கொண்டுள்ளது. வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயு, மழை நீருடன் கலந்து சிறிது அமிலத் தன்மையாக மாறி, பின் மலைநீர் ஆறாக உருவமாறி, மலைப் பாறைகள் மற்றும் மண்னில் உள்ள பலவகையான உப்பு முதலிய கனிமங்களுடன் கலந்து இறுதியாக கடலில் கலப்பதாலும் கடல் நீர், அருந்த முடியாத அளவிற்கு உப்புநீராக மாறுகிறது. மேலும் கடலுக்கடியில் உள்ள எரிமலைகள் நீராவியை கக்குவதாலும், எரிமலைகள் வெடிப்பதாலும், புவிக்கடியில் உள்ள உப்புக் கனிமங்கள் கடலில் கலப்பதால் கடல்நீர் உப்புத் தன்மையாக மாறுகிறது.[24]

Remove ads

கடலில் அறுவடை

ருஸ்யா ம்ற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பெருங்கடலை வைத்து நிறைய லாபம் ஈட்டுகின்றனர்.ருஸ்ய , ஜப்பானிய மீன்பிடி தொழிலாளர்கள் மிகப்பெரிய கப்பல்களில் சென்று பல வருடங்களுக்கும் மேலாக பெருங்கடளில் உள்ள மீன்களை பிடிக்கச் செல்வர்.அந்த கப்பல்களிளேயே அவர்களும் அவர்களின் குடும்பமும் தங்க அனைத்து வசதிகளும் இருக்கும்.மருத்துவமனை, தொழிற்சாலை, பள்ளிகள் உணவு மற்றும் பல இடங்கள் கப்பலிலேயே இருக்கும்.

மீன்பிடி தொழில்

கடலியல் வல்லுநர்கள் 15,300 வகையான மீன்கள் பெருங்கடளில் உள்ளது எனவும். அதில் பெரும்பாலும் உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்வும் கூறுகின்றனர். மீன் புரதச்சத்து அபரீதமாக உள்ள உணவு ஆகும். மீன்பிடி தொழில்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவும் வேலையும் கொடுக்கின்றது. இன்று, வழக்கமாக கடல் மீன்பிடி மூலம், கடலோர மக்களுக்கு தேவையான கலோரிகளில் சுமார் 2% கடல் மீன்கலே வழங்குகிறது. துனா, நெத்தலி, மற்றும், போலாக், ஃப்ளவண்டா மற்றும் குறுகு ஆகியவை கடலின் மேற்பரப்பில் பிடிபடும் மீன்களாகும்.ஒரு மில்லியன் டன் கடல் மீன்கள் வட பசிபிக் மற்றும் வட அட்லாண்டிக் கடல் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் அகப்படுகின்றன.பொதுவாக பிடிபடும் பத்து மீன்களில் கிட்டத்தட்ட எட்டு மீன்கள் மனிதர்களுக்கு உணவாக உண்ணப்படுகிறது. மற்ற மீன்கள் உரம், பசை, மற்றும் பிற விலங்குகளுக்கு உணவாக பயன்படுத்தப்படுகின்றன.

பெருங்கடலின் வெப்பம்

கடல் பகுதியில் வெப்பம் வேறுபடும். இரண்டு விதங்களாக வெப்பம் வேறுபடும் ஒன்று செங்குத்தாக (மேலிருந்து கீழாக) மற்றும் கிடைமட்டமாக மாறும். நிலநடுக்கோடு பகுதியில் கடல் சூடாக இருக்கும், முனையில்(போல்) மிகவும் குளிர்ந்த நீராகவும், பனிப்பாறைகளாகவும், இருக்கும். நீர், நிலத்தை காட்டிலும் மெதுவாக வெப்பம் மற்றும் குளுமையாடைகிறது. எனவே கடலின் பருவசூழல் நிலத்தைக்காட்டிலும் மாறுபடும்.

மேலும் கடலின் வெப்பம் ஒரே இடத்திலும் மூன்று விதமாக மாறும். அதாவது மேற்பரப்பில் ஒரு வெப்பமும், 2000 அடிக்கு மேல் ஒரு வெப்பமும், அடிப்பகுதியில் ஒரு வெப்பமும் உணரப்படும். இதை வெப்ப கலப்பு அடுக்குகள் என்பர்.

பெருங்கடலின் அடிபகுதிகளில் வெளிச்சம் இல்லாமல் கருப்பாக இருக்கும்.ஏனெனில் கடல் நீரில் உள்ள உப்புக்கள் ஒளியை சிதறச்செய்துவிடும்.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads