சம்பல்பூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம்பல்பூர் (Sambalpur) (ⓘ) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் மேற்கில் அமைந்த சம்பல்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். சம்பல்பூர் நகரம், ஒடிசா மாநிலத் தலைநகரம் புவனேஸ்வரத்திற்கு மேற்கில் 300 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்காளத் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து 550 கி.மீ. தொலைவிலும், சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரம், ராய்ப்பூரின் கிழக்கில் 278 கி.மீ. தொலைவிலும் சம்பல்பூர் நகரம் உள்ளது. சம்பல்பூர் நகரம், மகாநதி ஆற்றின் கரையில் உள்ளது.
சம்பல்பூர் நகராட்சி 1883ல் நிறுவப்பட்டது. 2013ல் சம்பல்பூர் மாநகராட்சியாக தகுதி உயர்த்தப்பட்டது.
Remove ads
போக்குவரத்து
சாலைப்போக் குவரத்து

சம்பல்பூர் வழியாகச் செல்லும் ஆசிய நெடுஞ்சாலை 46 மற்றும் கொல்கத்தா - ராய்ப்பூர் நாக்பூர் - சூரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 6[1], மாநில நெடுஞ்சாலை எண் 10 நாட்டின் பல நகரங்களுடன் இணைக்கிறது.[2]
தொடருந்து நிலையம்
மூன்று நடைமேடைகள் கொண்ட சம்பல்பூர் தொடருந்து சந்திப்பு நிலையத்திலிருந்து நாள்தோறும் 68 தொடருந்துகள் நாட்டின் பல நகரங்களை இணைக்கிறது.[3]
மக்கள் தொகையியல்
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சம்பல்பூர் மாநகரத்தின் மொத்த மக்கள் தொகை 189,366 ஆகும். அதில் ஆண்கள் 97,460 ஆகவும்; பெண்கள் 91,906 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 19,759 ஆகும். சராசரி எழுத்தறிவு 85.53 % ஆகும். பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தினர் 167,963 (88.70 %) ஆகவுள்ளனர். பிற சமயத்தவர்கள் 21.30% ஆக உள்ளனர். [4]
இந்நகரத்தில் சம்பல்புரி மொழி, ஒடியா மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசப்படுகிறது.
Remove ads
பொருளாதாரம்
சம்பல் நகரத்தின் பொருளாதாரம் வணிகத்தை நம்பியே உள்ளது. காடுகளில் கிடைக்கும் கெண்டு இலைகளைக் கொண்டு பீடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.[5] கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில் நகரமான சம்பல்பூரில் உற்பத்தியாகும் சம்பல்பூர் பட்டு மற்றும் கைத்தறிச் சேலைகள் புகழ் பெற்றதாகும்.[6]
சம்பல்பூரில் உள்ள இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் ஒரு அலகான மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் ஆண்டிற்கு 100.28 மில்லியன் tonnes (98.70 மில்லியன் long tons; 110.54 மில்லியன் short tons) நிலக்கரி வெட்டி எடுக்கிறது.[7]
புவியியல் & தட்பவெப்பம்
மகாநதி ஆற்றின் கரையில் அமைந்த சம்பல்பூர் நகரத்தின் மேல்புறத்தில் ஹிராகுட் அணை உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads