சம் சம் கிணறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம் சம் கிணறு (ZamZam well) அல்லது சம் சம் ஊற்று அல்லது சம் சம் அரபி: زمزم) என்பது மக்காவில் உள்ள ஹராம் பள்ளிவாசலில் உள்ள கிணற்றைக் குறிக்கும். இது காபாவின் கிழக்கே 20 மீ (66 அடி) தூரத்தில் உள்ளது. இசுலாமிய நம்பிக்கையின்படி இப்ராகிம் நபியின் புதல்வர் இசுமாயில் நபி தாகத்தினால் அழும் போது உருவானது. ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் மற்றும் உம்ராவின் போது முசுலிம்கள் இக்கிணற்றிலிருந்து தண்ணீர் அருந்துகின்றனர்.[1][2][3]
Remove ads
வரலாறு
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் இப்ராஹீம் (நபி) அவர்கள் தனது மனைவி ஹாஜரையும் மகன் பாலகன் இஸ்மாயிலையும்(நபி) சவூதி அரேபிய பாலைவனத்தில் விட்டுவிட்டு சென்றார் . அவருடைய மனைவி காரணம் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. இரண்டாம் முறைகேட்டும் பதிலில்லை. மூன்றாம் முறை "இது இறைவனின் கட்டளையா?" என்று கேட்டதற்கு இப்ராஹீம் நபி " ஆம் " என்ற பதிலைமட்டும் அளித்தார்.
பிறகு அந்த பாலைவனத்தில் தாகத்தினால் குழந்தை இஸ்மாயில் கதறி அழத்தொடங்கினார், தண்ணீரை தேடி தாய் "ஸபா", "மர்வா" ஆகிய மலைகளுக்கு மேலே ஏழு முறை மாறி மாறி ஏறி தண்ணீரை தேடினார். அப்போது அந்த இடத்தில் வானவர் ஜிப்ரீல் வந்து இறைவனின் கட்டளைப்படி தனது காலால் மண்ணில் அடித்தார் உடனே ஒரு ஊற்று பீரிட்டு எழுந்தது, அதைக் கண்ட அந்த தாய் ஓடி சென்று அந்த ஊற்றை அணைகட்டி "சம் சம்" என்று கூறினார் அதன் பொருள் "நில் நில்". அந்த ஊற்று அப்படியே நின்றது.
Remove ads
உசாத்துணை
- எஸ். நாகூர் மீரான், முன்னாள் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர் (வாழ்த்துரை) மற்றும் மு. அபுல் ஹசன், முன்னாள் செயலாளர் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, முகவுரையுடன், "ஹஜ்ஜும் உம்றாவும்", தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வெளியீடு. 9-2-1995
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads