சரவாக் டாலர்
சரவாக் இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்ட பணத் தாள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரவாக் டாலர் (ஆங்கிலம்: Sarawak Dollar; மலாய் மொழி: Dolar Sarawak); என்பது 1858-ஆம் ஆண்டில் இருந்து 1953-ஆம் ஆண்டு வரை சரவாக் இராச்சியத்தில் (Raj of Sarawak) பயன்படுத்தப்பட்ட பணத் தாள் (Currency) ஆகும்.
ஒரு சரவாக் டாலர் என்பது 100 சென்களைக் (100 cents) கொண்டது. அந்தக் காலக்கட்டத்தில் ஒரு நீரிணை டாலருக்கு (Straits Dollar) இணையாக ஒரு சரவாக் டாலர் இருந்தது. இந்த சரவாக் டாலருக்குப் பின்னர் மலாயா; சிங்கப்பூர் பிரதேசங்களில் மலாயா டாலர் (Malayan Dollar) புழக்கத்திற்கு வந்தது.
Remove ads
பொது
1938-ஆம் ஆண்டு வரையில், அனைத்து சரவாக் நாணயங்களும் சரவாக்கை ஆட்சி செய்த மூன்று வெள்ளை இராசாக்களின் (White Rajahs) உருவப் படங்களைக் கொண்டு இருந்தன. சரவாக் இராச்சியத்தின் முதல் மன்னரான ஜேம்சு புரூக்கின் (Rajah of Sarawak James Brooke) உருவப்படம் 1858-ஆம் ஆண்டு தொடங்கி 1868 வரை சரவாக் டாலரில் பதிக்கப்பட்டது.
சரவாக் இராச்சியத்தின் இரண்டாவது மன்னரான சார்லஸ் புரூக்கின் (Charles Brooke) உருவப்படம் 1868 முதல் 1917 வரை பதிக்கப்பட்டது. மூன்றாவது மன்னரான சார்லசு வைனர் புரூக்கின் (Charles Vyner Brooke) 1917 முதல் 1938 வரை சரவாக் டாலரில் பதிக்கப்பட்டது.
Remove ads
வரலாறு

1953-ஆம் ஆண்டில், சரவாக் டாலர்; மலாயா டாலர் ஆகிய இரண்டு நாணயங்களும், மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் (Malaya and British Borneo Dollar) என்று மாற்றம் செய்யப்பட்டன.
சரவாக் டாலரின் வரலாறு முழுவதும், அதன் நாணயங்கள் 1⁄4 சென் (Cent), 1⁄2 சென் (Cent), 1 சென் (Cent), 5 சென் (Cent), 10 சென் (Cent), 20 சென் (Cent), மற்றும் 50 சென் (Cent), மதிப்புகளில் அச்சிடப்பட்டன.
துளை வடிவமைப்பில் 1 சென் நாணயம்
தாமிரம் கலந்த 1⁄4 சென் (Cent), மிகச்சிறிய மதிப்பு கொண்டது. மற்றும் முதன்முதலில் நிறுத்தப்பட்டது. கடைசியாக இந்த நாணயம் 1896-இல் வெளியிடப்பட்டது. 1⁄2 சென் (Cent), எப்போதும் தாமிரமாக இருந்தது. 1933-இல் நிறுத்தப்பட்டது.
1892-இல் தொடங்கி 1 சென் நாணயத்தின் மையத்தில் துளை இருந்தது. அந்தத் துளை வடிவமைப்பு 1897-க்குப் பிறகு நிறுத்தப்பட்டது. 1920-ஆம் ஆண்டில் 1 சென் நாணயம் செப்பு-நிக்கல் கலவையில் வெளியிடப்பட்டது. பின்னர் 1927-இல் வெண்கலமாக மாறியது.
5 மற்றும் 10 சென் நாணயங்கள் 1920-ஆம் ஆண்டு வரையில் 80% வெள்ளி உலோகத்தில் தயாரிக்கப்பட்டன. பின்னர் 10 சென் நாணயங்களில், 40% வெள்ளி உலோகம் குறைக்கப்பட்டு செப்பு-நிக்கல் கலவைக்கு மாற்றப்பட்டன.
20 சென்; 50 சென் நாணயங்கள் வெள்ளியாகவே இருந்தன. 1920-இல் 20 சென்; 50 சென் நாணயங்களின் வெள்ளி உலோகக் கலவை 80%-இல் இருந்து 40%-க்கு குறைக்கப்பட்டது.[1]
Remove ads
வங்கி பணத்தாள்கள்



வங்கி பணத்தாள்கள் முதன்முதலாக சரவாக் அரசு கருவூலத்தால் (Sarawak Government Treasury) வெளியிடப்பட்டது. அவை குறைந்த தரத்தில் கையால் முத்திரையிடப்பட்ட பணத்தாள்களாக இருந்தன. 1919-ஆம் ஆண்டில் இருந்து அனைத்துப் பணத்தாள்களும் சரவாக் அரசாங்கத்தால் (Government of Sarawak) வெளியிடப்பட்டன.
சரவாக் டாலரின் வரலாறு முழுவதும், அதன் பணத்தாள்கள் கீழ்காணும் மதிப்புகளில் வெளிவந்தன.[2]
- 5 சென் (Cent)
- 10 சென்
- 20 சென்
- 25 சென்
- 50 சென்
- $1 டாலர் (Dollar)
- $5 டாலர்
- $10 டாலர்
- $25 டாலர்
- $50 டாலர்
- $100 டாலர்
சப்பானிய நாணயம்
பிரித்தானிய போர்னியோவில் சப்பானிய ஆக்கிரமிப்பு காலத்தில் (1942-1945), காகிதப் பணம் (Paper Money) 1 செண்டு முதல் 1000 டாலர்கள் வரையிலான மதிப்புகளில் வெளியிடப்பட்டன. இந்த நாணயம் 1 டாலர் = 1 சப்பானிய யென் (Yen) என நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, சப்பானிய நாணயம் மதிப்பற்றதாக அறிவிக்கப்பட்டது. சரவாக் டாலர் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads