சராய்காட்

From Wikipedia, the free encyclopedia

சராய்காட்
Remove ads

சராய்காட், இந்திய மாநிலமான அசாமின் குவகாத்திக்கு அருகில் உள்ள ஊர். இது பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் உள்ள பாலம் சாலைவழிப் போக்குவரத்துக்கும், ரயில்வழிப் போக்குவரத்தும் ஏதுவாக இருக்கிறது. சராய்காட் பகுதியில் மார்ச் 1671ல் அகோம் பேரரசுக்கும், முகலாயப் பேரரசுக்கும் இடையே போர் நடைபெற்றது. போரில் முகலாயர்கள் தோற்றனர்.[1]

விரைவான உண்மைகள் சராய்காட் শৰাইঘাটSaraighat, நாடு ...

பிரம்மபுத்திரா ஆற்றின் மீது கட்டப்பட்ட சராய்காட் பாலத்தின் அடியில், சராய்காட் போரில் முகலாயர்களை வென்ற அகோம் பேரரசின் படைத்தலைவர் லச்சித் பர்பூக்கன்[2] நினைவுப் பூங்காவும், சிலாராய் பூங்காவும் 1962ஆம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.[3] இந்த பாலம் வடகிழக்கு எல்லைப்புற இரயில்வேயின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டது.[4]

Thumb
சராய்காட் பாலத்தின் ஐம்பதாண்டு நிறைவை ஒட்டி எடுக்கப்பட்ட படம்
Remove ads

இதனையும் காண்க

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads