காமரூப் ஊரக மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காமரூப் ஊரக மாவட்டம், அசாமில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் அமிங்கோன் நகரம் ஆகும். இதன் அருகில் உள்ள பார்பேட்டா மாவட்டம், நல்பாரி மாவட்டம் ஆகியவற்றுடன் இதுவுன் சேர்ந்த பகுதியை காமரூப் பகுதி என்கின்றனர். இந்த மாவட்டங்களில் காமரூபி மொழி பேசுவதே இதற்கு காரணம். இந்த மாவட்டம் 4345 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1]
Remove ads
மக்கள் தொகை
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 1,517,202 மக்கள் வசித்தனர். [2] சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 436 பேர் வசிக்கின்றனர். [2]பால் விகிதத்தில் ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 936 பெண்கள் வசிக்கின்றனர். [2] இங்கு வசிப்போரில் 72.81 % பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]
மொழிகள்
இங்கு காமரூபி எனப்படும் திபெத்தோ-பர்மிய மொழியில் பேசுகின்றனர். [3] ஆ தோங் என்ற மொழியையும் சிலர் பேசுகின்றனர். [4]
பொருளாதாரம்
இங்கே நெல் பயிரிடப்படுகின்றது. சிலர் பருத்தி மற்றும் பட்டு போன்றவ~ற்றையும் உற்பத்தி செய்கின்றனர்.
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads