சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடாவில் அமைந்துள்ள பல்நோக்கு விளையாட்டு மைதானமாகும். மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னாள் பிரபல வீரர் சர் விவியன் ரிச்சட்சின் நிமித்தம் இம்மைதானம் பெயரிடப்பட்டுள்ளது. இது 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளுக்காக நிர்மானிக்கப்பட்டதாகும். உலகக்கிண்ணப் போட்டிகளின் போது இரண்டாம் சுற்றுப்போட்டிகளான "சுப்பர் 8" போட்டிகள் 6 இம்மைதானதில் நடைபெறும். 10,000 பார்வையாளருக்கு ஆசன வசதிகளைக் கொண்டுள்ள இம்மைதானத்தில் மேலும் 10,000 பார்வையாளர் நின்ற நிலையில் போட்டிகளைக் காண்பதற்கான வசதிகளும் காணப்படுகிறது. இதன் நிர்மானப்பணிகள் மக்கள் சீன குடியரசின் பொருளாதார உதவியுடன் செய்யப்பட்டன. இம்மைதானம் 60 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நிர்மானிக்கப்பட்டது. மைதானதில் இரண்டு நிரந்தர பார்வையாளர் அரங்குகளும் சில தற்காலிக அரங்குகளும் காணப்படுகின்றன. இங்கு வீரர்களுக்கு தரைகீழான போக்குவரத்துக்கான வசதிகள் காணப்படுகின்றன.

Remove ads
இவற்றையும் பார்க்க
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads